மேலும் அறிய
Advertisement
மணலில் மல்லுக்கட்ட தயாராக இருக்கும் மல்யுத்த வீரர்கள்..!-தேசிய கடற்கரை மல்யுத்த போட்டி தொடங்கியது
இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) சார்பில் மாமல்லபுரத்தில் தொடங்கிய முதல் கடற்கரை மல்யுத்த தேசிய போட்டிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன
கி.பி. 13ஆம் ஆண்டு முதலே பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மல்யுத்தப் போட்டி இருந்ததாக வரலாற்றுச் சிற்பங்கள் கூறகின்றன். அப்போது அங்கீகரிக்கப்பட்ட போட்டியாக கருதாமல் ஒரு பொழுதுபோக்காக திருவிழாக்களின்போதும், பல்வேறு நிகழ்ச்சிகளின்போதும் மல்யுத்தம் இருந்தது. முதன்முதலாக 1888 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் தேசிய மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. பின்னர், 1904 மிசௌரி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது மல்யுத்தப் போட்டி. 1912 ஆம் ஆண்டில் உலக மல்யுத்த சங்கம் பெல்ஜியத்தில் நிறுவப்பட்டது.
மண் மற்றும் புல்தரையில் மட்டுமே நடைபெற்று வந்த மல்யுத்தப் போட்டி, தற்போது உள் விளையாட்டு அரங்கில் அதற்கான பிரத்யேக ரப்பர் விரிப்பில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக், உலக போட்டிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த போட்டிகள் அனைத்தும் உள்விளையாட்டரங்கிலேயே நடைபெற்று வருகிறது. மல்யுத்தத்தின் ஒரு பிரிவான கடற்கரை மல்யுத்தம், அண்மைக்காலங்களில் அதிக கவனம் பெற்றுவரும் விளையாட்டாக மாறியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இதற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகச் சொல்லத் தகுந்த அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த விளையாட்டு, 2024 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கடற்கரை மல்யுத்த வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதன்முறையாக தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் இன்று முதல் 30 வரை மாமல்லபுரத்தில் உள்ள அரசு பீச் ரெசார்ட் வளாகத்தில் இந்த தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 70, 80, 90, 90+ கிலோ என நான்கு வகைகளிலும், மகளிருக்கான பிரிவில் 50, 60, 70, 70+ கிலோ என நான்கு வகைகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய மல்யுத்த சங்கத்தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரிஜ்புஷன் சரண் சிங் இன்று இப்போட்டியைத் துவங்கிவைக்கிறார். இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியா, வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர். அதேபோல, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறும் நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.
முன்னதாக போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் முதல் குத்துச்சண்டை ஒலிம்பியன் தேவராஜ், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீராங்கனை ஹர்பீர் கௌர், இந்திய பீச் மல்யுத்த சங்க தலைவர் ரோஷர்த் சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதுகுறித்து இந்தியா பீச மல்யுத்த சங்க தலைவர் கூறுகையில், ஒலிம்பிக்கில் மல்யுத்தம் போட்டி தொடர்பாகவும், தமிழ்நாட்டில் பீச் மல்யுத்தத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் பேசிய இந்திய பீச் சங்க தலைவர் ரோஷர் சிங் தமிழகத்தில் திறமையான மல்யுத்த வீரர்கள் இருப்பதாகவும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தமிழகத்திலிருந்து மல்யுத்த வீரர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மிக நீண்ட கடற்கரை இருப்பதால் இந்த போட்டி முதல் முறையாக தமிழகத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பெருமைப்படுத்தினார். அத்துடன் கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த போட்டி நடத்தப்படுவதாகவும், பார்வையாளர்கள் அனுமதியின்றி வீரர்கள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion