Indian Racing League : இந்தியன் ரேசிங் லீக் - கார் ரேஸில் இங்கிலாந்தை சேர்ந்த பெண் வீராங்கனை சாரா மூரே முதலிடம்!
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் கார் ரேஸில் இங்கிலாந்தை சேர்ந்த பெண் வீராங்கனை சாரா மூரே முதலிடம் பெற்றார்.
ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL) நடத்தும் இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் 2023 - இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் இன்று (நவம்பர் 5) நடைபெற்றது.
இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் வெப்ஸ்டர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை வியட்னாம் வீரர் அலெக்ஸ் சாவர் மற்றும் மூன்றாமிடத்தை இந்திய வீரர் ஷஹன் அலி மோஹ்சின் ஆகியோர் கைப்பற்றினர். மேலும், இன்று நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் (IRL) போட்டிகளில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சாரா மூரே முதலிடத்தைப்பிடித்து வெற்றி பெற்றார். 2 மற்றும் மூன்றாம் இடங்களை இந்திய வீரர்களான ஆகாஷ் கவுடா மற்றும் சாய் சஞ்சய் ஆகியோர் வென்றனர்.
அடுத்த சுற்று போட்டிகள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரையும் இறுதிப்போட்டிகள் டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளிலும் நடைபெற உள்ளன.
View this post on Instagram
தெற்காசியாவில் முதன்முறையாக...
இறுதிப்போட்டிகள் சென்னையில் உள்ள தீவுத்திடலில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள சர்க்யூட்டில் நடைபெற உள்ளது. இந்த பந்தய தளத்தில் இந்தியா மற்றும் தெற்காசியாவில் முதன்முறையாக இரவுப் பந்தயம் மற்றும் ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ஆண்கள் மற்றும் பெண்கள் குழு அடிப்படையிலான சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் இந்தியாவின் ஒரே மோட்டார் ஸ்போர்ட்ஸ் லீக் இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க: Virat Kohli: ஒருநாள் போட்டிகளில் 49வது சதத்தை விளாசிய கோலி - சச்சினின் சாதனையை சமன் செய்து அசத்தல்
மேலும் படிக்க: IND vs SA Innings Highlights: 49வது ODI சதம் விளாசி கோலி சாதனை - தென்னாப்ரிக்காவிற்கு 327 ரன்கள் இலக்கு