IND vs SL: இந்தியா - இலங்கை ஒரு நாள் தொடர்: அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ!
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 18, 20, 22 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் வரும் ஜூலை மாதம் 13-ஆம் தேதி கொழும்புவில் தொடங்க இருந்தது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி ஜூலை 13,16,18 ஆகிய தேதி ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஜூலை 21,23,25 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணத்தால், சில தினங்களுக்கு முன்னரே இலங்கை சென்ற இந்திய அணி வீரர்கள், தனிமைப்படுத்தப்பட்டனர். இந்திய அணி விரர்கள், கடந்த 2ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்கினர். இந்திய அணிக்குள்ளேயே இரண்டு பயிற்சி போட்டிகளும் நடைபெற்றன. இந்தச் சூழலில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இலங்கை வீரர்கள் கடந்த 6ஆம் தேதி இலங்கை திரும்பினர். அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
Harleen Deol Profile: கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அசத்தலான கேட்ச்... யார் இந்த ஹர்லீன் தியோல்?
Ind vs SL: Limited-overs series to be rescheduled as precautionary measure
— ANI Digital (@ani_digital) July 9, 2021
Read @ANI Story | https://t.co/IqsH3LdfY8 pic.twitter.com/z7JkHfm5iM
இந்நிலையில், இலங்கை அணியைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், ஒரு நாள் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியைச் சேர்ந்த உதவியாளர் நிரோஷன், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளார் ஆகியோருக்கு டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை, இலங்கை மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்படாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜூலை 18, 20, 22 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#IndvsSL ODI series to start by July 18. Dates likely to be 18, 20, 22. T20Is likely to be on 24, 25,27 of July, says BCCI sources. Exact schedule to be out soon.
— G. S. Vivek (@GSV1980) July 10, 2021
இதே போல, டி-20 போட்டிகள், ஜூலை 25, 27 மற்றும் 29 தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை தொடர்: இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி !