India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்... இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வரும் (பிப்ரவரி 15) நடைபெற உள்ளது.
முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி - பிட்ச் ரிப்போர்ட்:
ராஜ்கோட்டில் உள்ள ஆடுகளம் சிறந்த விக்கெட்டுகளை எடுப்பதற்கு சாதகமான ஒன்றாக இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருக்கும். ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 3, 4 மற்றும் 5 ஆம் நாள்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவரும் இந்த ஆடுகளத்தில் தங்களது திறமைகளை வெளிபடுத்தலாம். அதேபோல், கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 593, அதே சமயம் இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 334. மூன்றாவது இன்னிங்ஸ் சராசரி 228, மற்றும் நான்காவது இன்னிங்ஸ் 172. ஒரு டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது, இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த மைதானத்தில் நடைபெற்ற ஏழு இன்னிங்ஸ்களில் மொத்தம் 2483 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது, இதில் 58 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.
அதிகபட்ச ரன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 649 ரன்கள் எடுத்திருக்கிறது.
வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
தனிநபர் அதிகபட்ச ரன்: இந்திய அணி வீரர் விராட் கோலி 230 பந்துகளில் 139 ரன்கள்.
அதிக ரன்கள்: இரண்டு டெஸ்ட் போட்டிகளில் புஜாரா 228 ரன்கள்.
அதிக சதம்: முரளி விஜய், புஜாரா, ஜடேஜா, பிரித்வி ஷா, விராட் கோலி ஆகியோர் தலா 1 சதம் அடித்துள்ளனர்.
அதிக விக்கெட்: இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
அதிக சிக்ஸர்: ஜடேஜா 6 சிக்ஸர்கள் எடுத்ததே இந்த மைதனாத்தில் ஒரு வீரர் எடுத்த அதிக சிக்ஸர்கள்.
சிறந்த பந்து வீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 ஓவர்களில் 108 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது.
மேலும் படிக்க: AUS vs WI T20:சர்வதேச டி20...ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!
மேலும் படிக்க: Watch Video: 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்தது ஏன்? தோனி கொடுத்த விளக்கம்! வைரல் வீடியோ!