(Source: ECI/ABP News/ABP Majha)
AUS vs WI T20:சர்வதேச டி20...ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது 5-வது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்துள்ளார்.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் டி20:
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் இங்கிலீஸ் ஆகியோர் களமிறங்கினார்கள்.
இதில், 19 பந்துகள் களத்தில் நின்ற வார்னர் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 22 ரன்களை குவித்தார். மறுபுறம் ஜோஸ் இங்கிலீஸ் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் களம் இறங்கினார்கள்.
109 metres!
— cricket.com.au (@cricketcomau) February 11, 2024
Massive from Maxwell #AUSvWI pic.twitter.com/BFtUxWClEl
சதம் விளாசிய மேக்ஸ்வெல்:
இதில் கிளெம் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். மறுபுறம் மிட்செல் மார்ஸ் 12 பந்துகள் களத்தில் நின்று 29 ரன்கள் எடுத்தார். ஆனால், மேக்ஸ்வெல் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டார். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 120 ரன்களை விளாசினார். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் இந்திய அணி கேப்டன் ரோகத் சர்மாவின் சாதனையையும் கிளென் மேக்ஸ்வெல் முறியடித்து அசத்தியுள்ளார்.
120* RUNS FROM 55 BALLS BY MAXWELL 🤯
— Johns. (@CricCrazyJohns) February 11, 2024
- Maxi has dominated the West Indies bowling, some brutal hitting through the innings & scored 120* runs from just 55 balls including 12 fours & 8 sixes. What a player. pic.twitter.com/4u39n4GmNW
இதற்கு முன்பு இந்திய அணி வீரர் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் கிளென் மேக்ஸ்வெல் சமன்செய்திருக்கிறார். தன்னுடைய முதல் டி20 சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 2-வது மற்றும் 3-வது சதம் இந்திய அணிக்கு எதிராகவும் நான்காவது சதம் இலங்கை அணிக்கு எதிராகவும் அடித்த சூழலில் தான் இன்று 5- வது டி20 சதத்தை பதிவு செய்திருக்கிறார் மேக்ஸ்வெல். முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியல்:
- கிளென் மேக்ஸ்வெல்(ஆஸ்திரேலியா) - 05*
- ரோகித் சர்மா(இந்தியா) - 05
- சூர்யகுமார் யாதவ்(இந்தியா) - 04
- பாபர் ஆசாம் (பாகிஸ்தான்) - 03
- காலின் முன்ரோ (நியூசிலாந்து) - 03
மேலும் படிக்க: IND vs AUS U19 WC Final: 254 ரன்கள் இலக்கு! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய இளம்படை?
மேலும் படிக்க: Rohit Sharma: ”கப்பு முக்கியம் பிகிலு” - ஜூனியர் வீரர்களுக்கு வாழ்த்துகளை தட்டி விட்ட ரோகித் சர்மா