மேலும் அறிய

IND vs SL: இலங்கை அணி சொதப்ப..சொதப்ப.. கோபத்தால் கத்திக்கொண்டிருந்த பயிற்சியாளர்..!

193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இலங்கையே வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது. ஆனால், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி, இலங்கையின் வெற்றி வாய்ப்பை தவிடு பொடியாக்கியது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் கையே ஓங்கியிருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் நிலைமை மாற மாற, இலங்கை அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி வெற்றி பெற 276 ரன்கள் தேவைப்பட்டது.

சேஸிங் செய்த இந்திய அணிக்கு, சூர்யகுமார் யாதவ் ரன்களை சேர்க்க மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டெயில் எண்டராக களமிறங்கிய தீபக் சஹார், 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இலங்கையே வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது. ஆனால், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி, இலங்கையின் வெற்றி வாய்ப்பை தவிடு பொடியாக்கியது. இவர்களை வீழ்த்த முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறி கொண்டிருக்க, அதை பார்த்துக்கொண்டிருந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், இலங்கை வாரிய அதிகாரி ஒருவரிடம் தனது கோபத்தை காட்டி, கத்திக்கொண்டிருந்தார். இது டிவியில் ஒளிபரப்பாக, அதனை ஸ்கீன்ஷாட் எடுத்த நமது நெட்டிசன்கள், அவரின் கோபத்தை கிண்டல் மீம்ஸ் போட்டுள்ளனர்.

 

 

போட்டி முடிந்தவுடன் மைதானத்திற்குள் நுழைந்து, இலங்கை அணி கேப்டனிடமும் கோபமாக பேசியுள்ளார். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது.

 

 

 

கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கிய போட்டியில்,டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கையின் அவிஸ்கா பெர்னாண்டோ, மினட் பனுகா ஜோடி துவக்க வீரர்களாக களம் இறங்கினர். 13 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில்,ஒரு விக்கெட் கூட இந்திய பவுலர்கள் எடுக்க முடியாமல் திணறினர். அதே நேரத்தில் இந்திய பந்து வீச்சை இலங்கை துவக்க வீரர்கள் எளிதில் அணுகினர். இந்த நிலையில் ஆட்டத்தில் 14வது ஓவரை வீசிய சஹால், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால், சஹாலுக்கு ஹாட்-ட்ரிக் வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஹாட்-ட்ரிக் பந்து டாட் பந்து ஆனதால், ஹாட்-ட்ரிக் எடுக்கும் வாய்ப்பை சஹால் தவறவிட்டார். மினட் பனுகா 42 பந்துக்கு 36 ரன்களும், பனுகா ராஜபக்சே முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

அதனை தொடர்ந்து, அவிஷா ஃபர்ண்டாண்டோ மட்டும் சிறப்பாக ஆட, அரை சதம் கடந்தபோது ஆட்டமிழந்தார். மற்றொரு பேட்ஸ்மேனான சரித் அஸ்லாங்காவின் பொறுப்பான ஆட்டத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 6 பவுண்டரிகள் விளாசிய அவர், 65 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சமிகா கருணரத்னே 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் எடுத்தது.


IND vs SL: இலங்கை அணி சொதப்ப..சொதப்ப.. கோபத்தால் கத்திக்கொண்டிருந்த பயிற்சியாளர்..!

இந்த இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர், இந்திய அணி 40 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டமிழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், மனிஷ் பாண்டே ஆகியோரு சுமாராக பேட்டிங் ஆடினர்.

சூர்யகுமார் யாதவ் மட்டும் களத்தில் நின்று விளையாட, 6 பவுண்டரிகளை அடித்த அவர் அரை சதம் கடந்தார். எனினும், இந்திய அணி வெற்றி பெற அதிக ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் டக்கவுட்டாகி பெவிலியன் திரும்பினார். க்ருணால் பாண்டியா, தீபக் சஹார் ஜோடி சுதாரித்து கொண்டு ஆட, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இன்றைய போட்டியில், கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார் தீபக் சஹார். 

49.1 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து இந்திய அணி போட்டியை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget