IND Vs AUS, Innings Highlights: ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் அதிரடி அரைசதம்... பலமான ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்கள் இலக்கு!
India vs Australia 2nd T20 - Innings Highlights: ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்தனர்.
கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இச்சூழலில், தான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று (நவம்பர் 26) விளையாடி வருகிறது. அதன்படி, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்:
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
அதன்படி இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் வரை களத்தில் நின்றது. இதில், 25 பந்துகள் களத்தில் நின்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகளை பறக்க விட்டார். மேலும், 2 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதம் எலிஸ் பந்தில் ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதநேரம், டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களுக்குள் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பின்னர் வந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஜோடியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்படி, 15 ஓவர்கள் முடிவின் படி இந்திய அணி 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதிரடியாக அரைசதம் அடித்த இஷான் கிஷன் விக்கெட் இழந்தார். முன்னதாக கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற போட்டியிலும் அதிரடியாக அரைசதம் அடித்திருந்தார் இஷான் கிஷன்.
மேலும் இன்றைய போட்டியில் 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 52 ரன்களை குவித்தார். மறுபுறம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களை மிரட்டிக்கொண்டிருந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.
அந்த வகையில் 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அந்த வகையில், மொத்தம் 43 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அப்போது களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து 19 ரன்கள் எடுத்து நாதம் எல்லிஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், வந்த ரிங்கு சிங்கும் அதிரடியாக விளையாடினார்.
அந்த வகையில், பந்துகள் களத்தில் நின்ற ரிங்கு சிங் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை என மொத்தம் 31 ரன்கள் எடுத்தார். மறுபுறம் கடைசி ஓவரில் 1 சிக்ஸரை பறக்க விட்ட திலக் வர்மா 7 ரன்கள் எடுக்க இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்களை குவித்தது. தற்போது 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்க உள்ளது.