மேலும் அறிய

T20 WC: கவுண்டவுன் ஆரம்பம்... உலகைச் சுற்ற தயாராகும் டி-20 உலகக்கோப்பை: சஸ்பென்ஸ் உடைத்த ஐசிசி!

2016 டி-20 உலகக்கோப்பையின் நட்சத்திர வீரரான வெஸ்ட் இண்டீஸின் கார்லஸ் பிராத்வைட் இந்த டிராபி டூரை இன்று அறிமுகம் செய்ய உள்ளார்.

7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதனால், டி-20 உலககோப்பைக்கான அட்டவனை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்திருந்தது. 

இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், குறிப்பாக இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடக்க இருந்த டி-20 உலககோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுவதால், அதனை ஒட்டியுள்ள ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மீண்டும் இந்தியாவுக்கு தொடர் மாற்றப்படலாம் என ரசிகர்கள் யூகித்து கமெண்ட் செய்து வந்தனர்.

ஆனால், சர்ப்ரைஸ் செய்தியை உடைத்த ஐசிசி, டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுனை இன்று முதல் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, ஐசிசி டி-20 உலகக்கோப்பை காணொளி காட்சி வழியாக உலகைச் சுற்றி வர உள்ளது. 

2016 டி-20 உலகக்கோப்பையின் நட்சத்திர வீரரான வெஸ்ட் இண்டீஸின் கார்லஸ் பிராத்வைட் இந்த டிராபி டூரை இன்று அறிமுகம் செய்ய உள்ளார். ஐசிசி டி-20 உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் டி-20 தொடர்பான சிறப்பான ஃபில்டர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை தொடர்பான அனைத்து தகவல்களும், அப்டேட்களும் #T20WorldCup என்ற ஹேஷ்டாக்கின் கீழ் பதியப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த ஹேஷ்டாக் பயன்படுத்தி ரசிகர்களும் கிரிக்கெட் அணிகளுக்கு தங்களது ஆதரவை அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. 

அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை”  யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை” யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Angry on narikuravar : வீடுகேட்ட நரிக்குறவர்! மிரட்டிய பொன்முடி! ”யோவ் சும்மா இருய்யா”H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை”  யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை” யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
Embed widget