Video Djokovic : "என் மகன் இன்னும் சிரிப்பதே மகிழ்ச்சி…" : தோல்விக்கு பின் உடைந்து அழுத ஜோகோவிச்!
தோற்ற பின்னர் பேட்டி அளிக்கும்போது, அவருக்கு ஆதரவாக அங்கு நின்ற தனது இளைய மகன் ஸ்டீபனிடம் ஜோகோவிச் பேசுகையில், உடைந்து போய் கண்ணீர் விட்டது சுற்றி இருந்தவர்களை உருக செய்தது.
நேற்றைய போட்டிக்கு முன்பு ஒரே ஒரு வீரர் மட்டுமே நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து இருந்தார். அதுவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு. 2013-ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி ஆண்டி முர்ரேவுக்கு எதிராக தோற்ற பிறகு, அடுத்த 46 போட்டிகளில் ஜோகோவிச் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். ஆனால் கார்லோஸ் அல்கராஸ் அனைத்து முரண்பாடுகளையும் மீறி, ஜோகோவிச்சை 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற கணக்கில் வென்று தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்ததோடு, விம்பிள்டன் பட்டத்தையும் தட்டி சென்றார்.
உடைந்து அழுத ஜோகோவிச்
தோல்விக்குப் பிறகு, ஜோகோவிச் கண்ணீரில் ஆழ்ந்தார். அந்த புகழ்பெற்ற 2019 இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருக்கு எதிராக தான் வெற்றி பெற்றிருக்கக் கூடாது என்று ஜோகோவிச் கூறினார், அதற்கான பழிவாங்கல் தான் இன்று என்னை அல்கராஸ் வீழ்த்தியது என்றார். இது 2017 க்குப் பிறகு அவர் ஒரு போட்டியில் பெற்ற முதல் தோல்வி ஆகும். நான்கு மணி நேரம் 42 நிமிடங்கள் நடந்த இந்த காவிய மோதலில், தோற்ற பின்னர் பேட்டி அளிக்கும்போது, அவருக்கு ஆதரவாக அங்கு நின்ற தனது இளைய மகன் ஸ்டீபனிடம் ஜோகோவிச் பேசுகையில், உடைந்து போய் கண்ணீர் விட்டது சுற்றி இருந்தவர்களை உருக செய்தது.
மகன் இன்னும் சிரிப்பது மகிழ்ச்சி
"ஆமாம், என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று ஜோகோவிச் நேர்காணலை நிறுத்துவதற்கு முன் கண்ணீர் சிந்தி அழுதார். அவர் மேலும் பேசுகையில், "லவ் யூ, என்னை ஆதரித்ததற்கு நன்றி." என்றார். 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை செய்ய முடியாதது, மற்றும் தனது விம்பிள்டன் ஆளுமையை நீட்டித்து, 8வது விம்பிள்டன் வெல்லும் சாதனையை பெறாமல் போனது குறித்து மனம் உடைந்த ஜோகோவிச் கண்ணீர் சிந்தியது சூழ்ந்திருந்த ரசிகர்களை உருக செய்தது. ஃபெடரருக்கு எதிரான 2019 இறுதிப் போட்டியில் அவர் சாம்பியன்ஷிப் வென்று, தனது பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
I’m not crying… you’re crying.
— Jason Page (@TheBackPage) July 16, 2023
A truly human moment here with Djokovic.#Wimbledon pic.twitter.com/MphTOIk608
பெருமைகொள்ளத்தான் வேண்டும்
மேலும் பேசிய ஜோகோவிச், "என்னைப் பொறுத்தவரை, இது போன்ற போட்டிகளில் நாம் ஒருபோதும் தோற்க விரும்புவதில்லை. ஆனால் நன்றாக தெரியும், இந்த கன நேர உணர்ச்சிகள் எல்லாம், தீர்ந்த பின்னர் நான் மிகவும் பெருமை உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் கடந்த காலங்களில் பல நெருக்கமான போட்டிகளில் வென்று பட்டத்தையும் வென்றுள்ளேன்," என்றார்.