Hockey World Cup 2023: இதை மட்டும் சரி செய்தோம், நாங்க யாருன்னு நிரூபிச்சோம்...இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கருத்து!
ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து எதிரான போட்டியில் இந்திய அணி கோல் எதுவும் அடிக்காமல் டிரா செய்தது.
ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து எதிரான போட்டியில் இந்திய அணி கோல் எதுவும் அடிக்காமல் டிரா செய்தது. இந்தநிலையில், இதுகுறித்து இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ”டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து நாங்கள் எதிரணியை கோல் அடிக்க எளிதாக விட்டு விட்டோம். ஆனால், இப்போது அதை சரிசெய்து கொண்டோம். அது இந்த போட்டியில் நிரூபித்து எங்களுக்கு சாதகமாக்கி கொண்டோம். முந்தைய போட்டியில் நாங்கள் பல பெனால்டி கார்னர்களை விட்டு கொடுத்தோம். ஆனால், இன்றைய போட்டியில் அவற்றை நன்றாக பாதுகாத்தோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஹாக்கி உலகக் கோப்பைக்கு முன்பு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 அடித்த போது இந்தியா 25 கோல்களை விட்டு கொடுத்தது
நீங்கள் வேகமான ஹாக்கி விளையாடும்போது, அது நடக்கும். பல பெனால்டி கார்னர்களை நீங்கள் விட்டுகொடுத்தால் அது கவலையாக மாறிவிடும். நாங்கள் முயற்சி செய்து திருத்தம் செய்யப் போகிறோம்
எதிரணி எதிராக நாம் விளையாடும்போது நாம் முயற்சி செய்து சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் வீரர்களின் அர்ப்பணிப்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு அணிகளும் விளையாடிய ஒரு உயர் திறமையான ஹாக்கி போட்டியாக அமைந்தது.” என்று தெரிவித்தார்.
Here's a glimpse at the neck-to-neck match between England and India.#HockeyIndia #IndiaKaGame #HWC2023 #StarsBecomeLegends #ENGvsIND @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI @EnglandHockey pic.twitter.com/aFzH1MfMYU
— Hockey India (@TheHockeyIndia) January 15, 2023
நேற்றைய போட்டியின்போது ஃபார்மில் உள்ள மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் வலது தொடை தசைபிடிப்பு காரணமாக காயமடைந்தார். இதுகுறித்து குறித்து பேசிய ரீட், ” ஹர்திக் சிங் ஆட்டத்தின் பாதியிலிருந்து வெளியேறும்போது அது மிகவும் மோசமாக இருந்தது. அதன்பிறகு மருத்துவர்களிடம் இருந்து கிடைத்த அப்டேட்டின்படி, முதலில் நாங்கள் நினைத்தது போல் காயம் அவ்வளவு மோசமாக இல்லை. விரைவில் குணமடைந்துவிடுவார்” என தெரிவித்தார்.
உலகக் கோப்பை ஹாக்கி - இந்தியாவின் தற்போதைய நிலைமை:
இந்தியாவும், இங்கிலாந்தும் தலா ஒரு வெற்றியுடன் ஹாக்கி உலகக் கோப்பையை தொடங்கினர். ஜனவரி 19ஆம் தேதி புவனேஸ்வரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், இங்கிலாந்து அணி தனது கடைசி குரூப் மோதலில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
Here are the pool standings after day 4️⃣ of FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar-Rourkela.#HockeyIndia #IndiaKaGame #HWC2023 #HockeyWorldCup2023 #StarsBecomeLegends @CMO_Odisha @sports_odisha @Media_SAI @IndiaSports pic.twitter.com/DN6YvGPE0Y
— Hockey India (@TheHockeyIndia) January 16, 2023
குரூப் டி பிரிவில் இங்கிலாந்து 5 கோல்கள் அடிப்படையில் முதலிடத்திலும், இந்தியா 2 கோல்களுடன் 2 இடத்திலும் உள்ளது.