FTX Crypto Cup : ஒரே ஆண்டில் மூன்றாவது முறை... உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அசத்திய பிரக்ஞானந்தா!
உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்த ஆண்டில் மட்டும் 3 வது முறையாக வீழ்த்தி தமிழத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்த ஆண்டில் மட்டும் 3 வது முறையாக வீழ்த்தி தமிழத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
The #FTXCryptoCup is over, with @MagnusCarlsen taking 1st place while @rpragchess edged out @AlirezaFirouzja into 2nd place after winning their head-to-head match! https://t.co/IbzJPYmpjn#ChessChamps pic.twitter.com/TlNve3g2t9
— chess24.com (@chess24com) August 21, 2022
Magnus Carlsen was just about to win and force tiebreaks, but then he blundered and Praggnanandhaa wins the match — and takes 2nd place in the tournament! https://t.co/IbzJPYlRtP #ChessChamps #FTXCryptoCup pic.twitter.com/MofOzhGsSQ
— chess24.com (@chess24com) August 21, 2022
FTX கிரிப்போ கோப்பை 7 வது மற்றும் இறுதிச்சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி 15 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளார். உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் பிரக்ஞானந்தாவிடம் தோல்வியுற்றாலும் 16 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று FTX கிரிப்போ கோப்பை கைப்பற்றி அசத்தினார்.
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு பிறகு பிரக்ஞானந்தா அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கப் செஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், அணிஷ் கிரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள அலிரெசா ஃபிரொஸ்ஜாவை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள அனிஷ் கிரியை வீழ்த்தினார். மூன்றாவது சுற்றில் நெய்மனை வீழ்த்தினார்.
அதேபோல், கடந்த 18 ம் தேதி நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான லெவான் அரோனியனை எதிர்த்து விளையாடினார். உலக செஸ் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள அரோனியனை 3-1 என்ற கணக்கில் லெவான் அரோனியனை பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார்.
It's a done deal- Praggnanandhaa wins 3 games in a row and defeats Magnus Carlsen in the blitz playoffs! The boy has created history, and he finishes second in the @ChampChessTour FTX Crypto Cup. pic.twitter.com/KsWzw1TqGo
— ChessBase India (@ChessbaseIndia) August 21, 2022
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 8ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அத்துடன் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று இருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கமும் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்று இருந்தனர்.