Sunil Chhetri: சர்வதேச அளவில் 91-வது கோல்.. உலக அளவில் 4-வது இடம்.. தனித்துவ சாதனையை படைத்த சுனில் சேத்ரி!
நேபாளத்திற்கு எதிராக ஒரு கோல் அடித்ததன் மூலம் சுனில் சேத்ரி, தற்போது சர்வதேச அளவில் தனது 91 வது கோல்களை பதிவு செய்துள்ளார்.
பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற 2023 SAFF சாம்பியன்ஷிப்பில் இந்திய கால்பந்து அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில், இந்திய கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் நௌரெம் மகேஷ் சிங்கின் உதவியால் இந்திய அணி நேபாளத்திற்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம் சுனில் சேத்ரி, தற்போது சர்வதேச அளவில் தனது 91 வது கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும், இந்தியாவுக்காக தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் கோல் அடித்த சாதனையும் சேத்ரி படைத்தார்.
91 சர்வதேச கோல்கள்:
இந்தியாவுக்காக சுனில் சேத்ரி சர்வதேச அளவில் 91 கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன், குரூப் ஏ போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் சர்வதேச கால்பந்தில் நான்காவது அதிக கோல் அடித்தவர் பட்டியலில் சுனில் சேத்ரி தற்போது 4வது இடத்தில் இருக்கிறார். 123 கோல்களுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்திலும், 109 கோல்களுடன் முன்னாள் ஈரான் வீரர் அலி டேய் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இவர்களை தொடர்ந்து, அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 103 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
தரவரிசை | வீரர்கள் | நாடு | கோல்கள் | போட்டிகள் | அறிமுகம் | கடைசி போட்டி |
---|---|---|---|---|---|---|
1 | கிறிஸ்டியானோ ரொனால்டோ | போர்ச்சுகல் | 123 | 200 | 20 ஆகஸ்ட் 2003 | 20 ஜூன் 2023 |
2 | அலி டேய் | ஈரான் | 109 | 148 | 6 ஜூன் 1993 | 21 ஜூன் 2006 |
3 | லியோனல் மெஸ்ஸி | அர்ஜெண்டினா | 103 | 175 | 17 ஆகஸ்ட் 2005 | 15 ஜூன் 2023 |
4 | சுனில் சேத்ரி | இந்தியா | 91 | 139 | 12 ஜூன் 2005 | 24 ஜூன் 2023 |
5 | மொக்தார் தஹாரி | மலேசியா | 89 | 142 | 5 ஜூன் 1972 | 19 மே 1985 |
6 | ஃபெரெங்க் புஸ்காஸ் | ஹங்கேரி | 84 | 85 | 20 ஆகஸ்ட் 1945 | 14 அக்டோபர் 1956 |
7 | அலி மப்கவுத் | ஐக்கிய அரபு நாடுகள் | 81 | 109 | 15 நவம்பர் 2009 | 16 நவம்பர் 2022 |
8 | காட்ஃப்ரே சிட்டாலு | ஜாம்பியா | 79 | 111 | 29 ஜூன் 1968 | 12 டிசம்பர் 1980 |
ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி | போலந்து | 79 | 142 | 10 செப்டம்பர் 2008 | 20 ஜூன் 2023 | |
10 | ஹூசைன் சயீத் | ஈராக் | 78 | 137 | 5 செப்டம்பர் 1976 | 3 மார்ச் 1990 |
இந்தியாவுக்காக சேத்ரி அடித்த கோல் வரிசை:
- SAFF சாம்பியன்ஷிப்: போட்டிகள் 24 - கோல்கள் 22
- FIFA WCQ: போட்டிகள் 19 - கோல்கள் 9
- நேரு கோப்பை: போட்டிகள் 14 - கோல்கள் 9
- ஆசிய கோப்பை தகுதிச் சுற்று: போட்டிகள் 12 - கோல்கள் 8
- இன்டர்காண்டினென்டல் கோப்பை: போட்டிகள் 11- கோல்கள் 13
- AFC சேலஞ்ஜ் கோப்பை: போட்டிகள் 8 - கோல்கள் 4
- AFC சேலஞ்ஜ் கோப்பை தகுதிச் சுற்று: போட்டிகள் 6 - கோல்கள் 3
- AFC ஆசிய கோப்பை: போட்டிகள் 5 - கோல்கள்
- 4 கிங்ஸ் கோப்பை: போட்டிகள் 1 - கோல்கள் 1
- நட்பு போட்டிகள்: போட்டிகள் 39 - கோல்கள் 18
SAFF சாம்பியன்ஷிப்பில் அதிக கோல்கள்:
SAFF சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரண்டாவது அதிக கோல் அடித்தவர் பட்டியல் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மாலத்தீவு வீரர் அலி அஷ்ஃபாக்கை 23 கோல்களுடன் முதலிடத்திலும், 22 கோல்களுடன் சேத்ரி 2வது இடத்திலும் இருக்கிறார். முன்னாள் இந்திய அணியின் கால்பந்து வீரர் 12 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.