SAFF Championship: லெபானானை அரையிறுதியில் ஓடவிட்ட இந்தியா.. பெனால்டி முறையில் பெண்டெடுத்த இந்திய வீரர்கள்!
SAFF சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் லெபானானை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
SAFF சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் லெபானானை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.
போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது, ஆனால் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்த போட்டியானது பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு செய்யப்பட்டது.
India vs Lebanon - winning moments #SAFFChampionship #SAFF #indiavslebanon #SunilChhetri pic.twitter.com/JRtTd13cED
— Nishant Rana (@nishantranaCRM) July 1, 2023
ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி:
கிடைத்த முதல் வாய்ப்பிலேயே இந்திய அணிக்கு கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அதனை தொடர்ந்து பெனால்டி முறையில் இந்திய அணி கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றி அசத்தியது. பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய கால்பந்து அணி SAFF சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Woo-hoo..
— Trupti Murgunde (@TMurgunde) July 1, 2023
Sensational ,
Thriller,
Nerve biting ,
match #BlueTigers pull there way through a penalty shootout 4-2 against 🇱🇧 to make it to finals ⚽️ 🥅 💃 #SAFFChampionship2023
Go for the 🏆. come on 🇮🇳 #SunilChhetri #TeamIndia
@BluePilgrims @IndianFootball @Media_SAI pic.twitter.com/7AmDojqN0G
அடுத்ததாக SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி குவைத் அணியை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி குவைத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டிராவில் முடிந்த இந்தியா-குவைத் போட்டி:
முன்னதாக, SAFF சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்தியா, குவைத் அணிகள் மோதியபோது, போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அடுத்ததாக நடந்த ஆட்டத்தில் இந்தியா நேபாளத்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் சுனில் சேத்ரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. நேபாளத்துக்கு எதிராக கேப்டன் சுனில் சேத்ரி, மகேஷ் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் சுனில் சேத்ரி கோல் அடித்தார். 70வது நிமிடத்தில் மகேஷ் சிங் இரண்டாவது கோலை அடிக்க, இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இருப்பினும், இப்போது இந்திய ரசிகர்களின் பார்வை SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியின் மீது உள்ளது. இப்போட்டியில் குவைத் அணி இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.