FIFA WORLDCUP 2022: அனல் பறக்கும் கத்தாரில் இன்றைக்கு மோதவுள்ள அணிகள் எது? முழு விபரம் உள்ளே..!
FIFA WORLDCUP 2022: உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்றைக்கு 4 போட்டிகள் நடக்கின்றன. குரூப் இ, எஃப் ஆகிய குரூப்களுக்குள் இன்று போட்டிகள் நடக்கவுள்ளன.
FIFA WORLDCUP 2022: உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்றைக்கு 4 போட்டிகள் நடக்கின்றன. குரூப் இ, எஃப் ஆகிய குரூப்களுக்குள் இன்று போட்டிகள் நடக்கவுள்ளன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் 29 நாட்களுக்கான திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடாரும் மோதின. அந்த ஆட்டத்தில் ஈகுவடார் 0-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. இன்று ஒரே நாளில் 4 ஆட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே நேற்று முன்தினம் செனகலுடன் நடந்த போட்டியில் கத்தார் அடைந்த தோல்வியால் கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் இருந்து முதல் அணியாக வெறியேறியது. அதேபோல் பிரான்ஸ் அணி டென்மார்க் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டிகள்
இன்றைக்கு மொத்தம் 4 போட்டிகள் நடைபெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டி என்றால் அது, நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கவுள்ள ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான நேரடி மோதல் தான். இரு அணிகளும் முன்னாள் சாம்பியன்கள் என்பதாலேயே இந்த போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குரூப் இ
ஜப்பான் (24) - கோஸ்டாரிகா (31) மாலை 3.30 மணி
ஸ்பெயின் (7) - ஜெர்மனி (11) நள்ளிரவு 12.30 மணி
குரூப் எஃப்
பெல்ஜியம் (2) - மொராக்கோ (22) மாலை 6.30 மணி
குரோஷியா (12) - கனடா (41) இரவு 9.30 மணி .
ஸ்பெயின் (7) - ஜெர்மனி (11) நள்ளிரவு 12.30 மணி
கோப்பையை வெல்லும் அணிகள் என கணிக்கப்பட்டுள்ள இரு அணிகளும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரு அணிகளும் மோதவுள்ளன. ஏற்கனவே இரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் அணி 8 முறையும் ஜெர்மனி அணி 9 முறையும் வென்றுள்ளன. 9 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டியில் இரு அணிகளும் அனல் பறக்க மோதிக் கொள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நட்சத்திர வீரர்கள்
ஸ்பெயின் - சைமன் - அஸ்பிலிக்யூட்டா, ரோட்ரி, லபோர்ட், ஆல்பா - கவி, புஸ்கெட்ஸ் , பெட்ரி - டோரஸ், அசென்சியோ, ஓல்மோ
ஜெர்மனி - நியூயர் - கெஹ்ரர், ருடிகர், ஸ்க்லோட்டர்பெக், ரவும் - கிம்மிச், குண்டோகன் - க்னாப்ரி, முல்லர், முசியாலா - ஃபுல்க்ரக்