FIFA WORLDCUP 2022: கதறி அழும் நெய்மர்... ஆர்ப்பரிக்கும் மெஸ்ஸி..! இணையத்தில் வைரலாகும் ஜாம்பவான்கள்..
FIFA WORLDCUP 2022: நேற்று நடந்த முதல் இரண்டு கால் இறுதி போட்டிகளின் முடிவுகளுக்குப் பிறகு டிவிட்டரில் நெய்மர் மற்றும் மெஸ்ஸி இருவரும் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.
FIFA WORLDCUP 2022: நேற்று நடந்த முதல் இரண்டு கால் இறுதி போட்டிகளின் முடிவுகளுக்குப் பிறகு டிவிட்டரில் நெய்மர் மற்றும் மெஸ்ஸி இருவரும் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.
பிரேசில் தோல்வி:
உலகக் கோப்பை கால்பந்து தொடர் போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இந்த போட்டித் தொடரில் ஏற்கனவே லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் இரண்டு கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்த நிலையில், போட்டியின் முடிவுகளுக்குப்பிறகு இணையத்தில் பிரேசில் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான நெய்மர் மற்றும் அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி என இருவரது பெயரும் இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதற்கு முன்னதாக, நேற்று நடந்த முதலாவது கால் இறுதிப் போட்டியில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியும் குரோஷிய அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியினை பார்த்தவர்கள் பெரும்பாலும், பிரேசில் வெற்றிபெற்றுவிடும் என நினைத்துகொண்டு இருக்கையில் போட்டியின் கடைசி நிமிடங்களில் பெனால்டி ஷாட்டில் பிரேசில் அணி தோல்வியைத் தழுவியது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. மேலும், குரோஷிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அர்ஜெண்டினா வெற்றி:
நேற்று நடந்த இரண்டாவது கால் இறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் அர்ஜெண்டினா அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ஜெண்டினாவை எளிதில் வெற்றியடைய விடாமல் நெதர்லந்து அணி தடுத்தது என்பது தான் உண்மை. மேலும், இந்த போட்டியின் முழு நேரமும் முடிவடையும் போது இருஅணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டு இருந்தன.
இதனால், மேலும் கூடுதல் நேரத்தில் போட்டியில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாததால், போட்டியின் நேரம் மேலும் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதிலும் மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படாத நிலையில், போட்டியின் முடிவினை பெனால்டி ஷாட்கொண்டு முடிவு செய்யப்பட்டது. இதில் அர்ஜெண்டினா அணி 4 கோல்களும், நெதர்லாந்து 3 கோல்களும் அடித்தது. இதனால் அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
View this post on Instagram
பிரேசில், அர்ஜெண்டினா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களில் பெரும்பாலானோர் நினைத்து இருக்க, பிரேசில் அதிர்ச்சி தோல்வி அடைந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் மைதானத்திலேயே கதறி அழுத நெய்மரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களின் முடிவுகளின் படி, அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவும் குரோஷியாவும் மோதவுள்ளன.