FIFA Worldcup 2022 Semi-final: நாளை முதலாவது அரையிறுதி.. 6வது முறையாக பைனலுக்கு முன்னேறுமா அர்ஜென்டீனா
நாளை அரையிறுதியில் அர்ஜென்டீனாவை சந்திக்கிறது குரோஷியா. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு கத்தாரின் லுசெயில் மைதானத்தில் நடக்கிறது.
நாளை அரையிறுதியில் அர்ஜென்டீனாவை சந்திக்கிறது குரோஷியா. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு கத்தாரின் லுசெயில் மைதானத்தில் நடக்கிறது.
நெதர்லாந்து அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா.
மற்றொரு அரையிறுதியில் மொராக்கோவும், பிரான்ஸும் சந்திக்கின்றன. இந்த ஆட்டம் டிச.14 நள்ளிரவு நடக்கிறது. இந்த ஆட்டம் அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்குள் இரண்டு அணிகள் மட்டுமே முன்னேறும்.
அர்ஜென்டினா-குரோஷியா எப்படி?
தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 12ஆவது இடத்தில் உள்ள குரோஷியாவுடன் மோதுகிறது.
அர்ஜென்டினா-குரோஷியா அணிகள் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையில் சந்திக்கின்றது. அரையிறுதியில் இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறை.
1988-இல் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவும், ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 3-0 என்ற கணக்கில் குரோஷியாவும் ஜெயித்தன. 2 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினா, 6 ஆவது முறை பைனலுக்கு முன்னேற ஆவலுடன் இருக்கிறது. இதுவரை அரையிறுதியில் அர்ஜென்டினா தோற்றது கிடையாது.
கடந்த உலகக் கோப்பையில் ரன்னர் அப்பான குரோஷியா நல்ல ஃபார்மில் உள்ளது. அரையிறுதியில் அர்ஜென்டினாவை வீழ்த்தினால் தொடர்ச்சியாக பைனலுக்கு சென்ற 4வது அணி என்ற பெயரை பெரும்.
இதற்கு முன்பு இத்தாலி (1934, 1938), நெதர்லாந்து அணி (1974, 1978), ஜெர்மனி (1982, 1985, 1990) ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக் கோப்பை பைனலுக்கு முன்னேறியிருக்கிறது.
குரோஷியாவைப் பொருத்தவரை பெனால்டி ஷூட் அவுட் சென்றால் ஜெயித்துவிடுகிறது. எனவே அர்ஜென்டினா கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.
உலகக் கோப்பை
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.