மேலும் அறிய

FIFA Football World Cup: தரவரிசையில் டாப்-10 இடங்களில் உள்ள கால்பந்து அணிகள்!

FIFA World Cup 2022: இந்தப் போட்டியில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிபா) தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் குறித்து பார்ப்போம்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சில நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவியுடன் பங்கேற்றார்.
உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 50-ஆவது இடத்தில் உள்ள கத்தார் அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் தடம் பதிக்கிறது. 

தனது முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 44-ஆவது இடத்தில் உள்ள ஈக்குவடாரை சந்திக்கிறது.
இந்தப் போட்டியில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிபா) தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் குறித்து பார்ப்போம்.

ரேங்கிங்கில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள அணிகள் விவரம்

1. பிரேசில்
2. பெல்ஜியம்
3. அர்ஜென்டினா
4. பிரான்ஸ்
5. இங்கிலாந்து
6. இத்தாலி
7. ஸ்பெயின்
8. நெதர்லாந்து
9. போர்ச்சுகல்
10. டென்மார்க்

ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.  இதில் 22 உலகக் கோப்பையிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேசில் மட்டும்தான்.

இங்கிலாந்து
சர்வதேச தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, இதற்கு முன்பு 15 முறை உலகக்கோப்பை போட்டியில் களம் கண்டுள்ளது. 1966 இல் சொந்த மண்ணிலேயே சாம்பியன் ஆனது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹேரி கேன் ஆவார். 

பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேஷியா ஆகிய அணிகளும், குரூப் ஜி பிரிவில் 5 முறை சாம்பியனான பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குரூப் எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தியாகோ சில்வா பிரேசில் அணியை வழிநடத்தவுள்ளார்.

முன்னதாக, 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டத்துடன் இன்று தொடங்கியது.

உலகக்கோப்பை தொடக்கம்:

ரசிகர்களின் படையெடுப்பால் கத்தார் நாடே திக்குமுக்காடி போயிருக்கிறது. கத்தாரின் அல்பெய்த் ஸ்டேடியத்தில் முதல் ஆட்டம் உலகக் கோப்பையை நடத்தும் கத்தாருக்கும் தென் அமெரிக்க நாடான ஈகுவடாருக்கும் இடையே ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும், அவரது மனைவி சுதேஷ் தன்கரும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக கத்தாருக்குச் சென்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தோம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

FIFA World Cup 2022: பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள்..! லட்சக்கணக்கான ரசிகர்கள்..! கோலாகலமாகத் தொடங்கியது உலகக்கோப்பை

உலகக் கோப்பைப் போட்டியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடக்க நிகழ்ச்சிகள் இரவு சுமார் 7.30 மணி அளவில் தொடங்கியது. தென் கொரியாவைச் சேர்ந்த இசைக்குழுவினரின் நிகழ்ச்சிகளும், அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்குழுவினர், கொலம்பியா, நைஜீரியா,  உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பாப் பாடகர்களும் நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

கத்தாரில் மனித உரிமை மீறல் நிலவுவதாகக் கூறி அதை கண்டித்து பிரபல கொலம்பியா பாடகி ஷகிரா, பிரிட்டனின் டுவா லிபா, ராப் பாடகர் ராட் ஸ்டூவர்ட் விழாவை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்Sengottaiyan | டார்கெட் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனுக்கு support! அமித்ஷா பிரம்மாஸ்திரம்Prashant Kishor meets TVK Vijay | LEAK-ஆன ஆடியோ! ஸ்கெட்ச் போட்ட PK! ஜான் ஆரோக்கியசாமி OUT!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget