மேலும் அறிய

FIFA World Cup 2022: நெதர்லாந்து-ஈகுவடார் ஆட்டம் ட்ரா... ஈகுவடார் கேப்டன் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா?

தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, 44ஆவது இடத்தில் உள்ள ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து-ஈகுவடார் மோதின.

இந்த ஆட்டம் கலீஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்திலும் தாக்குதல் ஆட்டத்திலும் ஈடுபட்டனர். பந்து இரு அணிகள் வசமுமே சரிசமமாக இருந்தது.

இலக்கை நோக்கி ஈகுவடார் அதிகமுறை முயன்றது. ஆட்டம் தொடங்கிய 6ஆவது நிமிடத்திலேயே நெதர்லாந்து அணி வீரர் காப்கோ கோல் அடித்தார்.

எனினும், முதல் பாதியில் ஈகுவடாரால் கோல் போட முடியவில்லை. எனினும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி  ஈகுவடார் அணியின் கேப்டன் என்னர் வெலன்சியா 49ஆவது நிமிடத்தில் கோல் போட்டார்.

33 வயதாகும் என்னர் வெலன்சியா, தொடர்ச்சியாக 6-ஆவது கோலை உலகக் கோப்பைப் போட்டியில் அடித்தார்.  தாய்நாட்டுக்காக தொடர்ந்து 6 கோல்களை வலைக்குள் செலுத்திய வீரர்கள் வரிசையில் 4ஆவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார். 

போர்ச்சுகல் அணியின் ஈசேபியோ 1966ஆம் ஆண்டிலும், இத்தாலியின் பாலோ ரோசி 1982ஆம் ஆண்டிலும், ரஷ்யாவைச் சேர்ந்த ஓலெக் சலன்கோ 1994ஆம் ஆண்டிலும் இந்தச் சாதனையை இதற்கு முன்பு நிகழ்த்தியுள்ளனர்.

ஏற்கனவே, இந்த உலகக் கோப்பை தெடாரில் நெதர்லாந்து அணி 0-2 என்ற கோல் கணக்கில் செனகலையும், ஈகுவடார் அணி கத்தாரையும் வீழ்த்தியுள்ளது.

கலீஃபா சர்வதேச ஸ்டேடியம் (Khalifa International Stadium) 
இந்த ஸ்டேடியம் 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கத்தாருக்கு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் கிடைப்பதற்கு முன்பு அங்கு இருந்த ஒரே ஸ்டேடியம் இதுதான். இந்தப் போட்டிக்காக ஸ்டேடியம் புனரமைக்கப்பட்டுள்ளது. 8 ஆட்டங்கள் இங்கு நடக்கிறது. மூன்றாவது இடத்துக்கான (Third place) ஆட்டமும் இங்குதான் நடக்கவுள்ளது

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.

கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.

8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 

மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget