Ronaldo 200th Match: 200 வது சர்வதேச போட்டி.. விளையாடிய முதல் சர்வதேச வீரர்.. தனி சாதனையை படைத்த ரொனால்டோ!
கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஜூன் 20 ம் தேதி போர்ச்சுகல் அணிக்காக தனது 200வது சர்வதேச போட்டியில் விளையாடினார்.
உலகின் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பெயரில் மற்றொரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஜூன் 20 ம் தேதி போர்ச்சுகல் அணிக்காக தனது 200வது சர்வதேச போட்டியில் விளையாடினார். ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சிறப்பான மைல்கல்லை எட்டிய ரொனால்டோ, கோல் அடித்து தனது 200வது போட்டியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
200வது போட்டிக்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோ, கின்னஸ் உலக சாதனை கொடுத்து கவுரவப்படுத்தியது. இந்த ஆண்டு அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய குவைத்தின் பத்ர் அல்-முதாவாவின் 196 போட்டிகளின் சாதனையை ரொனால்டோ முறியடித்தார். ஐஸ்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 89வது நிமிடத்தில் கோல் அடித்த ரொனால்டோ, தனது வழக்கமான பாணியில் கொண்டாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Another matchwinner goal for Cristiano Ronaldo. ❤️🇵🇹
— CR7 BASE (@cr7base) June 21, 2023
Iceland - Portugal: 0-1
Goal: Ronaldo🐐 (89th min)#CristianoRonaldo pic.twitter.com/x2ohXen5CO
38 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அறிமுகமான 20 ஆண்டுகளுக்குப் பிறகு 200 சர்வதேச கால்பந்து போட்டிகளை முடித்துள்ளார். அதே நேரத்தில், 123 சர்வதேச கோல்கள் ரொனால்டோ தனது பெயரில் பதிவு செய்துள்ளார். ரொனால்டோ தனது 200வது போட்டி குறித்து UEFA இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் இது நம்பமுடியாத சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது 200வது போட்டி குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசுகையில், “ 200 வது போட்டி என்ற நிலையை அடைந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத தருணம் இது. 200 சர்வதேச போட்டிகளில் விளையாடுவது உண்மையில் நம்பமுடியாத சாதனை. இப்போட்டியில் அந்த அணி வெற்றி கோலை அடித்தது மறக்க முடியாததாக இருந்தது. இந்த வெற்றி எனக்கு மறக்க முடியாததாக இருக்கும். “ என தெரிவித்தார்.
அதிக சர்வதேச போட்டிகள் விளையாடிய கால்பந்து வீரர்கள் பட்டியல்:
எண் | கால்பந்து வீரர்கள் | நாடு | போட்டிகள் |
---|---|---|---|
1 | கிறிஸ்டியானோ ரொனால்டோ | போர்ச்சுகல் | 200 |
2 | படர் அல்-முதாவா | குவைத் | 196 |
3 | சோ சின் ஆன் | மலேசியா | 195 |
4 | அகமது ஹாசன் | எகிப்து | 184 |
5 | அகமது முபாரக் | ஓமன் | 183 |
6 | செர்ஜியோ ராமோஸ் | ஸ்பெயின் | 180 |
7 | ஆண்ட்ரெஸ் குர்டாடோ | மெக்சிகோ | 179 |
8 | முகமது அல்-டேயா | சவூதி அரேபியா | 178 |
9 | கிளாடியோ சுரேஸ் | மெக்சிகோ | 177 |
10 | ஜியான்லூகி பஃபன் | இத்தாலி | 176 |
குவைத்தின் பத்ர் அல்-முதாவா, கால்பந்தாட்டத்தில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் லியோன் மெஸ்ஸி 175 ஆட்டங்களுடன் 11வது இடத்தில் உள்ளார்.