(Source: ECI/ABP News/ABP Majha)
Asian Games 2023: தோல்விக்குப்பின் மீண்டெழுந்த இந்தியா.. வங்கதேசத்தை மிரட்டிய சுனில் சேத்ரி.. 1-0 என்ற கணக்கில் வெற்றி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன்மூலம், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக, சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்ட இந்திய அணி, இன்று நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. கடைசி நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடிக்க, இந்த கோலின் மூலம் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்த முயன்றது.
இந்தப் போட்டியின் ஒரே கோலை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 85-வது நிமிடத்தில் அடித்தார்.
Who better than the @Indianfootball captain @chetrisunil11 to take charge and secure 3 points with a 𝐖 for #TeamIndia 🫡🇮🇳
— Sony Sports Network (@SonySportsNetwk) September 21, 2023
Here is the moment that we can watch ♾️ times 🥹#SonySportsNetwork #Cheer4India #IndianFootball #Huangzhou2022 #AsianGames #INDBAN #IssBaarSauPaar pic.twitter.com/afVzAVVqCx
போட்டி சுருக்கம்:
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களால் இயன்றவரை கோல் அடிக்க முயற்சித்தும் யாருக்கும் சாதகமாக அமையவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி வரை இந்தியா - வங்கதேச வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், இரு அணி வீரர்களும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும், அதை சரியாக பயன்படுத்த முடியவில்லை. இந்த ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்கள் வங்கதேச வீரர்களின் ஆதிக்கம் காணப்பட்டாலும், அதன் பிறகு இந்திய வீரர்கள் மீண்டும் மீண்டெழுந்தனர்.
பெனால்டி மூலம் கிடைத்த வெற்றி:
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி சீனாவையும், வங்கதேச அணி மியான்மரையும் எதிர்கொண்டது. ஆனால், இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தனர். இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக அமைந்தது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க திணறிய நிலையில், ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்து இந்திய அணியை முன்னிலையில் வைத்து வெற்றியை தேடி தந்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்-24ம் தேதி) இந்திய கால்பந்து அணி, மியான்மரை எதிர்கொள்கிறது.
இந்திய ப்ளேயிங் லெவன்: தீரஜ் சிங், லால்சுங்னுங்கா, சிங்லென்சனா சிங், சந்தேஷ் ஜிங்கன், ஆயுஷ் சேத்ரி, அமர்ஜித் சிங் கியம், ராகுல் கேபி, சுனில் சேத்ரி (கேப்டன்), பிரைஸ் மிராண்டா, அப்துல் அஞ்சுகண்டன், ரோஹித் தானு
வங்கதேச ப்ளேயிங் லெவன்: மிதுல் மர்மா, மோஜிபோர் ரஹ்மான் ஜோனி, ஹசன் முராத், எம்டி ரிடோய், ரபியுல் ஹசன், சுமன் ரேசா, ஃபோசல் அகமது ஃபாஹிம், இசா பைசல், ஜெய்த் அகமது, ரஹ்மத் மியா, சகில் ஹொசைன்