மேலும் அறிய

தாய்நாட்டுக்குச் சென்றதும் அர்ஜென்டீனா அணி வீரர்களின் முதல் வேலை இதுதான்.. அறிவித்த கால்பந்து சங்கம்..

அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) உலகக் கோப்பை சாம்பியன்  ஆன தங்கள் நாட்டு அணி வீரர்கள் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஓபிலிஸ்கில் வெற்றியைக் கொண்டாடுவார்கள் என்று அறிவித்துள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) உலகக் கோப்பை சாம்பியன்  ஆன தங்கள் நாட்டு அணி வீரர்கள் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஓபிலிஸ்கில் வெற்றியைக் கொண்டாடுவார்கள் என்று அறிவித்துள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "உலக சாம்பியனின் அணி ஒபெலிஸ்க்கு ரசிகர்களுடன் கொண்டாட புறப்படும். ஆம், நாங்கள் உலக சாம்பியன்கள்" என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. 

அர்ஜென்டினா அரசாங்கம் செவ்வாய்கிழமை வங்கி விடுமுறை என்று அறிவித்தது, இதனால் முழு நாடும் "தேசிய அணிக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும்" என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிட்டு கெளரவித்துள்ளது.

இந்த டூடுலை அனிமேட் செய்து வெளியிட்டுள்ளது. ஆரம்பம் முதல் அக்ரசிவாக விளையாடிய மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி வலிமையான பிரான்சை வீழ்த்தி 36 வருடங்களுக்குப் பிறகு  உலககோப்பையை வென்றது. 22வது உலகக்கோப்பை போட்டி கத்தாரில் லூசைல் மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில், கால்பந்து விளையாட்டின் மிரட்டல் நாயகன் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவும் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

போட்டியின் ஆரம்பம் முதலே மிகவும் அக்ரசிவ் மோடில் விளையாடிய அர்ஜெண்டினா அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அர்ஜெண்டினா என முழங்கிக்கொண்டு இருக்க அர்ஜெண்டினாவின் ஆதிக்கம் மேலும், அதிகரித்தது. 

போட்டியின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக்கினை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சிறப்பாக கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோல்டன் பூட் போட்டியில் பிரான்ஸின் எம்பாப்வேவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வந்தார். அவர் இந்த கோலுடன் 6வது கோல் அடித்தார்.

முதல் பாதியில் அசத்தல்:

அதனைத்  தொடர்ந்து அக்ரசிவாக விளையாடிய அர்ஜெண்டினா அணியின் வீரரகளில் ஏஞ்சல் டி மரியா போட்டியின் 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு இரண்டாவது கோலினை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அடித்து பிரமிக்க வைத்தார். இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனது அணிக்காக அவர் கோல் அடித்த உற்சாகத்தினை ஆனந்த கண்ணீர் சிந்தி வெளிப்படுத்தினார். போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது. 

ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே

அதன் பின்னர் இரண்டவது பாதியில் ஆட்டம் முற்றிலும் அர்ஜெண்டினா பக்கம் இருக்க, 80வது நிமிடத்தில் கிடைத்த சிறப்பான வாய்ப்பான பெனால்டி ஷாட்டினை சாதூர்யமாக பயன்படுத்திய எம்பாப்வே கோலாக மற்றி பிரான்ஸ் அணிக்கு ஆறுதல் அளிக்க ஆறுதலால் அணி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்போதே, 81வது நிமிடத்தில் எம்பாப்வே காற்றில் வந்த பந்தை அட்டகாசமாக கோலாக மாற்றினார். இதனால் ஒட்டுமொத்த பிரான்ஸ் அணியும் போட்டிக்குள் வந்ததது. போட்டி 2 - 2 என்ற கணக்கில் டிராவாக இருக்க இரண்டாவது பாதி ஆட்டம் முடிந்தது. நார்மல் எக்ஸ்ட்ரா டைமில் மேற்கொண்டு எந்த அணியும் எடுக்காததால், மேற்கொண்டு 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. 

அதில் முதல் 15 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி அடிக்க முயன்ற கோல்களை மிகவும் சிறப்பான முறையில் பிரான்ஸ் வீரர்கள் தடுத்து உலகத்தரமான தடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அடுத்த 15 நிமிடங்களின் தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடிய அர்ஜெண்டினா அணியினர் சிறப்பான கூட்டு முயற்சியால் அணியின் கேப்டன், மேஜிகல் மெஸ்ஸி 108வது நிமிடத்தில் கோல் அடித்து அணியினை 3 - 2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கச்செய்ததுடன் போட்டியை தனக்கு சாதகமாகவும் மாற்றினார்.

இதனால் போட்டியின் முடிவில் அர்ஜெண்டினா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்கும் என நினைக்கையில் போட்டியின் 118வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷாட்டில்  எம்பாப்வே கோல் அடித்து அதகளப்படுத்த போட்டி மீண்டும் 3 - 3 என சமன் ஆனது. இந்த கோலின் மூலம் எம்பாப்வே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்தினார். 

பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி:

அதன் பின்னர் போட்டி பெனல்டி ஷாட்டுக்கு சென்றது. இதனால் இரு அணிகாளுக்கும் தலா 5 பெனால்டி ஷாட்டுகள் வழங்கப்பட்டன. பெனால்டி ஷாட்டில் எம்பாப்வே முதல் கோல் அடிக்க, அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் வந்த இரண்டு பிரான்ஸ் வீரர்கள் சொதப்ப, இரண்டு அர்ஜெண்டினா வீரர்கள் கோல் அடித்தனர்.  இதனால் போட்டி பெனால்டி ஷாட்டில் அர்ஜெண்டினா அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த ஷாட்டை பிரான்ஸ் வீரர் கோல் அடிக்க போட்டி 3 - 2 என ஆனது, ஆனால் அதன் பின்னர், அர்ஜெண்டினா வீரர் கோல் அடிக்க போட்டியை 4 - 2 என்ற கணக்கில் வென்று, 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியது.  

.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Embed widget