Nisha Dahiya Death: பிரதமர் வாழ்த்து தெரிவித்த வீராங்கனை இறந்ததாக பரவிய செய்தி: நடந்தது என்ன?
சமீபத்தில் செர்பியா நாட்டில் உள்ள பெல்கிரேடில் நடைபெற்ற U-23 மல்யுத்த தொடர், 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட நிஷா, வெண்கலப் பதக்கம் வென்று நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மல்யுத்த வீராங்கனையான நிஷா தாஹியாவையும், அவரது சகோதரரையும் ஹரியான சோனிப்பட்டில் உள்ள சுஷில் குமார் அகாடெமியில் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர் என்ற செய்தி இன்று மாலை பரவியது. இந்நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை யாரும் சுட்டுக் கொல்லவில்லை என்றும் நிஷா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் செர்பியா நாட்டில் உள்ள பெல்கிரேடில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த தொடர் 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட நிஷா, வெண்கலப் பதக்கம் வென்று நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செர்பியாவில் நடைபெற்ற மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்று நாடு திரும்பியவர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் வாழ்த்து தெரிவித்த சில மணி நேரங்களிலேயே வீராங்கனை நிஷா சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#Update | We have deleted our previous Tweet regarding wrestler #NishaDahiya as the news was found to be untrue.
— The Bridge (@the_bridge_in) November 10, 2021
Nisha has released this video informing that she is safe and is currently in Gonda for the Senior National Championship.#wrestling pic.twitter.com/vyL71BABtK
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் நிஷா, “நான் சீனியர்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப்பில் விளையாடுவதற்காக கோண்டாவில் உள்ளேன். நான் நலமாக இருக்கின்றேன்” என தெரிவித்திருக்கிறார்.
#WATCH | "I am in Gonda to play senior nationals. I am alright. It's a fake news (reports of her death). I am fine," says wrestler Nisha Dahiya in a video issued by Wrestling Federation of India.
— ANI (@ANI) November 10, 2021
(Source: Wrestling Federation of India) pic.twitter.com/fF3d9hFqxG
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்