P V Sindhu : போர்கண்ட சிங்கம்.. எதை கண்டு அஞ்சும்... இறுதிப் போட்டியில் உறுதியுடன் களமிறங்கும் பி.வி சிந்து..!
இந்திய அணி இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்று வருகின்ற்னர். ஜூலை 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர்.
இதில் இந்திய அணி இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இன்று விளையாட இருக்கிறார். நேற்று நடைபெற்ற பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சிங்கப்பூரின் வீராங்கனை யோ ஜிய மின்னை 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மொத்தம் 45 நிமிடங்களுக்கு மேலாக நடந்த விறுவிறுப்பான இந்த அரையிறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே பி.வி. சிந்து சிறப்பாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடி சிங்கப்பூரின் வீராங்கனை யோ ஜிய மின்னை 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பி.வி சிந்து கனடா நாட்டை சேர்ந்த மிச்செல் லியை இன்று மதியம் 1.30 மணிக்கு எதிர்கொள்கிறார். இன்றைய போட்டியில் பி.வி. சிந்து வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைக்கும். இதற்கு முன்னதாக, நடைபெற்ற 2014 மற்றும் 2018 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு பி.வி. சிந்து பதக்கங்கள் வென்றார். 2014 காமன் வெல்த் போட்டியில் வெண்கலமும், 2018 காமன் வெல்த் போட்டியில் வெள்ளியும் வென்றார் எனபது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு நடைபெறும் காமன் வெல்த் போட்டியில் இந்திய அணியின் போட்மிட்டன் சார்பில் இருந்து தங்கம் அல்லது வெள்ளி உறுதி செய்யப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியின் இந்தியாவின் கடைசி நாளின் முழுமையான அட்டவணை இதோ!
பேட்மிண்டன் :
பிற்பகல் 1:20 : பெண்கள் பிரிவில் பிவி சிந்து vs மிச்செல் லி (கனடா)- மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி
பேட்மிண்டன் :
பிற்பகல் 2:10: லக்ஷ்யா சென் vs டுஜு யங் என்ஜி (மலேசியா) - ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி
பேட்மிண்டன் :
பிற்பகல் 3 மணி: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி vs பென் லேன் மற்றும் சீன் வெண்டி - ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி
டேபிள் டென்னிஸ் :
பிற்பகல் 3:35 : ஆண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கப் போட்டி - சத்தியன் ஞானசேகரன் vs பால் டிரிங்ஹால் (இங்கிலாந்து)
டேபிள் டென்னிஸ் :
மாலை 4:25 : ஆண்கள் ஒற்றையர் தங்கப் பதக்கப் போட்டியில் அச்சந்தா சரத் கமல் vs லியாம் பிட்ச்போர்ட் (இங்கிலாந்து)
ஹாக்கி :
மாலை 5 மணி: ஆண்களுக்கான தங்கப் பதக்கப் போட்டி - இந்தியா vs ஆஸ்திரேலியா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்