மேலும் அறிய

Yashasvi Jaiswal on Kohli: "விராட் கோலி ஒரு லெஜண்ட்.. அவருடன் ஆடியதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.." மனம் திறந்த ஜெய்ஸ்வால்..!

விராட் கோலி ஒரு மேதை என்றும், அவருடன் பேட்டிங் செய்ததால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் புகழாரம் சூடியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி ஆடி வரும் 2வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. விராட்கோலி  87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா ஜோடி அபாரமாக ஆடினர். ஜெய்ஸ்வால் 57 ரன்களுடனும், ரோகித்சர்மா 80 ரன்களுடனும் அவுட்டானர். கடந்த டெஸ்டில் சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் அபாரமாக ஆடினார். அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் ஆடி வரும் விராட்கோலியை பற்றி பேசியுள்ளார்.

ஆசிர்வதிக்கப்பட்டவன்:

இதுதொடர்பாக, ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது, “ கிரிக்கெட் பற்றியும், கிரிக்கெட்டை தாண்டியும் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருந்தது. என்ன சொல்வது? அவர் ஒரு மேதை. அவருடன் விளையாடுவதால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

அவரவர் அனுபவத்தை விளக்குவதற்கும் ஒவ்வொரு வழி உண்டு. அவையனைத்தும் அனுபவங்கள். அனைவரது அறிவுரையையும் நான் மிக கவனமாக கேட்கிறேன். அவர்கள் பேசுவதற்கு பின்னால் சில சிந்தனைகள் இருக்கும். ரோகித்சர்மாவுடன் பேட்டிங் செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நாங்கள் எப்போதும் ஆட்டத்தின் சூழ்நிலை பற்றிதான் பேசுவோம். நாங்கள் எப்படி ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது? எங்கள் திட்டம் என்ன? என்பது குறித்து பேசுவோம். அவருடன் பேட்டிங் செய்வதும் மிகவும் அருமையான விஷயம் ஆகும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெய்ஸ்வால் அபாரம்:

இந்திய அணியின் புதிய நட்சத்திரமாக கருதப்படும் ஜெய்ஸ்வால் கடந்த டெஸ்ட் போட்டியில் ரோகித்சர்மா மற்றும் விராட்கோலி இருவருடனும் இணைந்து பேட்டிங் செய்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 240 ரன்கள் குவித்தது. விராட்கோலி – ஜெய்ஸ்வால் ஜோடி 110 ரன்களை எடுத்தது.

தன்னுடைய 500வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் விராட்கோலிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பானிபூரி விற்பவரின் மகனான ஜெய்ஸ்வால் தன்னுடைய அபாரமான பேட்டிங்கால் ஐ.பி.எல். தொடரில் இடம்பிடித்து தன்னுடைய பேட்டிங் திறமையை அனைவருக்கும் நிரூபித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ள ஜெய்ஸ்வால், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

அறிமுக வீரராக களமிறங்கிய முதல் டெஸ்டிலே 171 ரன்கள் குவித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND Vs WI Test: கோலி அபாரம்..ரோகித், ஜெய்ஷ்வால் அசத்தல்..மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் 288 ரன்கள் குவிப்பு

மேலும் படிக்க: Rohit Sharma: சதத்தை நழுவவிட்ட ரோகித் சர்மா; ஆவேசத்தில் ரோகித் சர்மா செய்தது என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget