மேலும் அறிய
Advertisement
UPW-W vs DC-W, Match Highlights: அதிரடியாக விளையாடிய டெல்லி ”கேப்கள்”; உ.பி வாரியர்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி..!
WPL 2023, UPW-W vs DC-W: உத்தர பிரதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றுள்ளது.
இந்த ஆண்டு முதல் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் பிரிமியர் லீக்கின் தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளே மீதமுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (மார்ச், 21) மும்பையில் உள்ள பிராபவுர்ணி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி பவர்ப்ளேவில் (முதல் 6 ஓவர்கள்) டெல்லி அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்கள். கொஞ்ச நேரத்தில் நமது முடிவு சரியா தவறா என மெக் லேனிங் யோசிக்கும் அளவிற்கு உ.பி. அணியின் ஆட்டம் இருந்தது. இந்த ஆட்டம் முதல் 10 ஓவர்கள் வரை தொடர்ந்தது.
அதன் பின்னர் மிகத் தீவிரமாக பந்து வீசிய டெல்லி அணியின் மிரட்டலான பந்து வீச்சுக்கு, உ.பி அணியினர் அணி வகுப்பு நடத்தினர் என கூறலாம். குறிப்பாக 18வது ஓவரின் முதல் பந்து மற்றும் 4வது பந்தில் அலெக்ஸ் கேப்ஸி விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால், டெல்லி அணி ஆட்டத்தினை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
20 ஓவர்கள் முடிவில் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தனர். உத்தர பிரதேச அணியின் சார்பில், தாலிய மெக்ரா ரன்கள் 58 சேர்த்தார். இந்த மகளிர் பிரிமியர் லீக்கில் அவரது 4வது அரைசதம் ஆகும். டெல்லி அணி சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் அலெக்ஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி பவர்ப்ளேவில் பவுண்டரிகளை பறக்கவிட்டபடி இருந்தனர். குறிப்பாக டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக விளையாடிபடி இருந்தார். ஷேஃபாலி வர்மா, ஜெமிமாவை வீழ்த்திய உத்தர பிரதேச அணி மெக் லேனிங் விக்கெட்டையும் அடுத்து வீழ்த்தினர். மெக் லேனிங் 21 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றப்பட்டார்.
கைகோர்த்த ”கேப்கள்”
அதன் பின்னர் பவுலிங்கில் அசத்திய மாரிசான் கேப் மற்றும் அலெக்ஸ் கேப்ஸி இருவரும் இணைந்து நிதானமாக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். லாவகமாக கிடைத்த பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்ட முடிவு செய்து விளையாடினர். 9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து இருந்தது. களத்தில் ”கேப்” ஜோடி நங்கூரத்தினை நிலைநாட்டிக்கொண்டு இருந்தது எனலாம். டெல்லி அணிக்கு அப்போது 66 பந்துகளில் 55 ரன்கள் தேவை என இருந்தது.
இறுதிப் போட்டிக்கு தகுதி
அதைத் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த கேப்ஸியை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திணறியது போட்டியின் போது அப்பட்டமாக தெரிந்தது எனலாம். ஆனால் போட்டியின் 17வது ஓவரில் கேப்ஸியின் விக்கெட்டை எகில்ஸ்டன் கைப்பற்றினார். இறுதியில் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 24ஆம் தேதியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியும் எலிமினேட்டர் போட்டியில் மோதிக் கொள்ளவுள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion