மேலும் அறிய

World Cup 2023 Points Table: இந்தியாவை தட்டித் தூக்கும் நோக்கில் தென்னாப்ரிக்கா..! உலகக் கோப்பை புள்ளிப்பட்டியல் இதுதான்

World Cup 2023 Points Table: உலகக் கோப்பையில் வங்கதேச அணியை வீழ்த்திய தென்னாப்ரிக்கா அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

World Cup 2023 Points Table: வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில், தென்னாப்ரிக்கா அணி 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்நிலையில் நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற, தென்னாப்ரிக்கா அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென்னாப்ரிக்கா அணி வெற்றி:

உலகக் கோப்பையின் 23வது லீக் போட்டி பேட்டிங்கிற்கு சாதகமான, மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குயிண்டன் டி காக், கிளாசென் மற்றும் மார்க்ரம் ஆகியோரின் அபார ஆட்டத்தால் அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 382 ரன்களை குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடுமையாக போராடிய மஹமதுல்லா மட்டும் 111 ரன்களை குவிக்க, 46.4 ஓவர்கள் முடிவில் 233 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்ரிக்கா அணி, நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புள்ளிப்பட்டியல் விவரம்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
இந்தியா 5 5 0 10
தென்னாப்ரிக்கா 5 4 1 8
நியூசிலாந்து  5 4 1 8
ஆஸ்திரேலியா 4 2 2 4
பாகிஸ்தான் 5 2 3 4
ஆப்கானிஸ்தான் 5 2 3 4
நெதர்லாந்து 4 1 3 2
இலங்கை 4 1 3 2
இங்கிலாந்து 4 1 3 2
வங்கதேசம் 5 1 4 2

தொடரும் புள்ளி வேட்டை:

நடப்பு உலகக் கோப்பையில் பாதி லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உடன் சேர்ந்து தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன. அதிலும், தென்னாப்ரிக்கா அணி, ரன் ரேட் விகிதத்தில் மற்ற அனைத்து அணிகளை காட்டிலும் மிகவும் வலுவாக உள்ளது. தலா இரண்டு வெற்றிகளுடன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் 5 மற்றும் 6வது இடத்தை வகிக்கின்றன. இதையடுத்து, நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகியவை தலா ஒரு வெற்றியுடன்,  முறையே கடைசி நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இன்றைய போட்டி:

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கலாம். ஒருவேளை நெதர்லாந்து அணி வெற்றி பெற்றால், அதிகபட்சமாக ஆறாவது இடத்திற்கு முன்னேறலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget