SA-W vs NZ-W:டி20 மகளிர் உலகக் கோப்பை;தென்னாப்பிரிக்க அணியின் தோல்விக்கு இதுதான் காரணமா?
SA-W vs NZ-W, Womens T20 World Cup 2024 Final: மகளிர் டி20 உலககக் கோப்பையில் நியூசிலாந்து அணியிடன் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
மகளிர் டி20 உலககக் கோப்பையில் நியூசிலாந்து அணியிடன் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
இறுதிப் போட்டியில் தோல்வி:
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது சீசன் கடந்த 3-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதின. அணிகள் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் 5 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகளின் முடிவில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் 2 இடங்களை பிடித்ததன் அடிப்படையில் அவை அரையிறுதிக்கு முன்னேறின. மற்ற அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியது.
பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை நியூசிலாந்து அணியும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது நியூசிலாந்து அணி.
தென்னாப்பிரிக்க அணியின் தோல்விக்கான காரணம்:
இச்சூழலில், தென்னாப்பிரிக்க அணியின் தோல்விக்கான முக்கிய காரணம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வோல்வார்ட் மற்றும் தாஜ்மின் பிரிட்ஸ் ஜோடி சிறப்பான தொடக்கத்தை தான் அமைத்துக் கொடுத்தார்கள். பவர்ப்ளேவிற்கு முன்பு வரை ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் வசம் தான் இருந்தது. அதாவது, முதல் விக்கெட் இழப்பே 51 ரன்னில் தான் நடந்தது. அப்ப்போது 6.5ஓவர்கள் தான் முடிந்திருந்தது.
அந்த நேரத்தில் வூல்வர்ட் முழு ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்தார். இந்த ஜோடியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். தஜ்மினின் விக்கெட் வீழ்ந்ததால் இந்த பார்ட்னர்ஷிப் முறிந்த பிறகு, வோல்வார்ட் மூலம் நியூசிலாந்து அணிக்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
ஆனால், பத்தாவது ஓவரில் வோல்வார்ட், போஷ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அமேலியா போட்டியை ஓரளவு தனக்குச் சாதகமாக மாற்றினார்.அடுத்த 13 பந்துகளில் மரிஜான் கேப் மற்றும் டி கிளர்க்கின் விக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டபோது போட்டியின் முடிவு மாறியது. அடுத்து வந்த வீராங்கனைகளால் நிலைத்து ஆட முடியவில்லை. சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.