IndW vs PakW, T20 WC LIVE: மகளிர் டி20 உலகக்கோப்பை: திருப்பி கொடுத்து திணறவைத்த இந்தியா... கதிகலங்கிய பாகிஸ்தான்!
India vs Pakistan, Women T20 WC 2023: மகளிர் டி20 உலகக்க்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபிநாடு இணையதளத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Background
India vs Pakistan, Women T20 WC 2023: மகளிர் டி20 உலகக்க்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபிநாடு இணையதளத்தில் இணைந்திருங்கள்.
2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது போட்டியில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) நடைபெறும் ஆட்டத்தில் இந்திய பெண்கள் (IND-W) பாகிஸ்தான் பெண்களை (PAK-W) எதிர்கொள்கிறது . இப்போட்டியில் பலமான இந்திய அணி தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்திய மகளிர் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று பேட்டிங் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மகளிர் T20I தரவரிசையில் உலகின் 4வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்த அணியினருக்கு அதிர்ச்சியாக உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் அலியா ரியாஸின் ஆட்டம் மட்டும் தான் அந்த பயிற்சி ஆட்டத்தில் ஆறுதல் அளிக்கும் வகியில் இருந்தது. அலியா ரியாஸ் 30 பந்துகளில் 48* ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். பிப்ரவரி 12-ம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆலியாவின் ஆட்டம் முக்கியமானதாக இருக்கும் எனலாம்.
IND-W vs PAK-W போட்டி விவரங்கள்:
இந்தியா பெண்கள் vs பாகிஸ்தான் பெண்கள், 4வது போட்டி, குரூப் பி, பெண்கள் டி20 உலகக் கோப்பை
இடம்: நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்
தேதி மற்றும் நேரம்: பிப்ரவரி 12, மாலை 6:30 IST
டெலிகாஸ்ட் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளத்திலும் ஒளிப்பரப்பாகவுள்ளது.
பிட்ச் அறிக்கை:
தென்னாப்பிரிக்கா பெண்கள் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இந்த ஆடுகளம் மாறியது. சுழற்பந்து வீச்சுக்கு வரும்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே சம பலத்தில் உள்ளன, மேலும் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்யும் அணி அதிக ஸ்கோரை எட்டுவது சாத்தியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Star India batter is likely to miss Sunday's blockbuster #T20WorldCup clash against Pakistan.
— ICC (@ICC) February 11, 2023
Details 👇https://t.co/6FiPrdeV4t
இந்திய வீராங்கானிகள் (IND-W):
ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ் (வி.கே), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
பாகிஸ்தான் வீராங்கனைகள் (PAK-W):
சித்ரா அமீன், ஜாவேரியா கான், முனீபா அலி (wk), பிஸ்மா மரூஃப் (c), நிதா தார், அலியா ரியாஸ், ஆயிஷா நசீம், பாத்திமா சனா, அய்மான் அன்வர், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்
இந்தியா அபார வெற்றி வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பாகிஸ்தான் வைத்த இலக்கை 19 ஓவரில் இந்தியா எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் பவுண்டரி..!
போட்டியின் 18 ஓவரின் முதல் மூன்று பந்தில் இந்திய அணியின் ரிச்சி கோஷ் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தியுள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!
17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.