மேலும் அறிய

Womens T20 worldcup: பொளந்து கட்டிய ஸ்மிருதி மந்தனா.. அயர்லாந்துக்கு 156 ரன்கள் இலக்கு.. அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?

மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அயர்லாந்திற்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அயர்லாந்திற்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி பேட்டிங்:

செயிண்ட் ஜாட்ஜ் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 62 ரன்களை சேர்த்தபோது, 24 ரன்கள் எடுத்து இருந்த ஷஃபாலி வர்ம தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆட, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் அவருக்கு உறுதுணையாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஸ்மிருதி மந்தனா அரைசதம்:

அயர்லாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஸ்மிருதி மந்தனா, 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். சர்வதேச டி-20 போட்டிகளில் அவர் அடிக்கும் 22வது அரைசதம் இதுவாகும். மறுமுனையில் ஹர்மன் பிரீத் கவுர் 13 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனாலும், ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 87 ரன்களை குவித்து அவுட்டானார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. இதையடுத்து ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் அயர்லந்து அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி:

8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது. 26 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட்  வித்தியாசத்திலும் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இதன்மூலம் 2 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.  இதனால் அரையிறுதிக்கு செல்ல ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தோற்றால், இந்தியா - பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Embed widget