Watch Video: ஜோ ரூட்டைப் போல் பேட்டை நிறுத்தும் விராட்; இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
நியூசிலாந்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் லீசஸ்ட்டர் ஷேயர் அணியுடன் இந்திய அணி விளையாடியது. அப்போதுவிராட் கோலி இங்கிலாந்து வீரர் ரூட்டைப் போல் பேட்டை நிறுத்த முயற்சி.
நியூசிலாந்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் லீசஸ்ட்டர் ஷேயர் அணியுடன் இந்திய அணி விளையாடியது. அப்போது விராட் கோலி இங்கிலாந்து வீரர் ரூட்டைப் போல் பேட்டை நிறுத்த முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரன் மெஷின் எனச் சொல்லபடும் விராட் கோலி துடிப்பான மற்றும் ஆக்ரோசமான வீரர் மட்டுமிலாமல் குறும்பான வீரரும் கூட. அவ்வப்போது மற்ற வீரைகளைப் போல் செய்வது வாடிக்கை. ஐபிஎல் போட்டியின் போது கிரிஸ் கெயில் போலவும் செய்து குஷிப்படுத்டியவர். அப்போது விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தார். மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குறிப்பெடுப்பதைப் போல் செய்யும் சைகையையும் செய்து அதகளப்படுத்தியவர் இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலி.
After Joe roots magic which was seen on the pitch by balancing the bat @imVkohli trying the same 😂 pic.twitter.com/TUZpAUJSA1
— Yashwanth (@bittuyash18) June 23, 2022
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிகெட் அணி கிரிகெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நியூசிலாந்தின் லீசஸ்ட்டர் ஷேயர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இன்று ஈடுபட்டது. அப்போது இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலி தான் களத்தில் விளையாடிக் கொண்டு இருந்த போது, தான் வைத்திருந்த பேட்டினை, இங்கிலாந்தின் கிரிகெட் வீரர் ஜோ ரூட்டைப்போல் பேட்டை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பேட், ஜோ ரூட் நிறுத்திய போது நின்றதைப் போல் நிற்கவில்லை. மீண்டும் விராட் கோலி முயற்சி செய்தார் அப்போதும் போட் நிற்கவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிகெட் ரசிகர்கள், இங்கிலாந்து கிரிகெட் ரசிகர்கள் என அனைவரும் டிவிட்டரில் இந்த வீடியோவினை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கிரிகெட் வீரர் விராட் கோலி 21வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்