(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: நீச்சல் உடை.. அந்தரத்தில் பறந்து கேட்ச்... நீச்சல்குளத்தில் டேவிட் வார்னர் அட்ராசிட்டி..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நீச்சல் உடையில் கேட்ச் பிடிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க கட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தவர், தற்போது மிகவும் ஜாலியான மனிதராகவே உலா வருகிறார். குறிப்பாக, இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடர்களில் பங்கேற்கத் தொடங்கிய பிறகு இந்திய பாடல்களுக்கு நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை அடிக்கடி குஷிப்படுத்தி வந்தார்.
நீச்சல் உடையில் வார்னர்:
இப்போது வரை டேவிட் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதாவது வித்தியாசமான வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் டேவிட் வார்னர் அவர்கள் தங்கியுள்ள இடத்தின் அருகில் உள்ள நீச்சல் குளத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நீச்சல் உடையில் ஓடி வரும் டேவிட் வார்னர் நீச்சல் குளத்தின் மேலே பறந்து பந்தை கேட்ச் பிடித்து அப்படியே மூழ்கு நீச்சலில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் மூழ்கி எழுந்திருக்கிறார். அதன் பின்னணியில் உலகப்புகழ்பெற்ற பார்பி கேர்ள் பாடல் ஒலிக்கிறது. இதை டேவிட் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கென் இன் ஆக்ஷன் என பதிவிட்டு பதிவிட்டுள்ளார்.
இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:
Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்
View this post on Instagram
தெறிக்கும் லைக்ஸ்:
டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களுமே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பார்க்க வைப்பதுடன் லைக்ஸ்களையும் அள்ளும். இந்த வீடியோவும் லைக்ஸ்களை அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் புஷ்பாடா என்ற வசனத்திற்கும் டேவிட் வார்னர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.
டேவிட் வார்னர் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். இந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Cricketer's Retirement: கடந்த 5 நாட்களில் இதுவரை 5 வீரர்கள்.. கிரிக்கெட்டுக்கு மோசமான காலமா ஆகஸ்ட்..? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
மேலும் படிக்க: ODI World Cup 2023: இந்திய மண்ணில் கோப்பை வெல்லணும்.. திட்டமிட்டு இந்தியரை இறக்கிய நியூசிலாந்து.. யார் இந்த சவுரப் வால்கர்..?