Virat Kohli: தொடரும் கிங் கோலியின் ரெக்கார்ட் வேட்டை.. சச்சின் சாதனை முறியடிப்பு..
Virat Kohli: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்கிற சாதனையை படைத்தார் இந்திய வீரர் விராட் கோலி.
வதோதராவில் நடந்த இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 25 ரன்கள் எடுத்தப்போது கோலி இந்த சாதனையை படைத்தார்.
சாதனை படைத்த கோலி
சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 28,000 ரன்கள் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார், 644 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். விராட் கோலி தனது 624வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார், டெண்டுல்கரை விட 20 இன்னிங்ஸ் குறைவாக எடுத்துக் கொண்டார். விராட் மற்றும் சச்சினைத் தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது பேட்ஸ்மேன் இலங்கையின் குமார் சங்கக்காரா ஆவார்.
வேகமாக 28000 ரன்கள்:
624 இன்னிங்ஸ் - விராட் கோலி
644 இன்னிங்ஸ் - சச்சின் டெண்டுல்கர்
குமார் சங்கக்கார - 666 இன்னிங்ஸ்கள்
🚨 Milestone Alert 🚨
— BCCI (@BCCI) January 11, 2026
Virat Kohli is now the second highest run-getter in international cricket (Men's) 🫡
Updates ▶️ https://t.co/OcIPHEpvjr#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/vf3Yr8FYhG
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை குமார் சங்கக்காரா 28,016 ரன்கள் எடுத்து வைத்துள்ளார். அவரை முறியடிக்க கோலிக்கு இன்னும் 41 ரன்கள் தேவை. சச்சின் டெண்டுல்கர் தனது வரலாற்று வாழ்க்கையில் 34,357 ரன்கள் குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்
விராட் கோலி - 28,017+ ரன்கள்
குமார் சங்கக்கார - 28,016 ரன்கள்
விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்களையும், 125 டி20 போட்டிகளில் 4,188 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 14,600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஒருநாள் வரலாற்றில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே வைத்திருக்கிறார்.





















