நெய்யை பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். தினமும் உணவில் எடுத்துக் கொள்கிறார்கள்.
Image Source: freepik
தவறாமல் நெய் உட்கொண்டால் எடை அதிகரிக்கும். இதன் காரணமாக உடல் பருமன் அல்லது அதிக எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
Image Source: freepik
இதய சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் நெய்யை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. இது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
Image Source: freepik
யாருக்கு அதிக ட்ரைகிளிசரைடுகள் போன்ற பிரச்சினைகள் இருக்கிறதோ... அவர்கள் நெய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இதில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது.
Image Source: freepik
வயிற்றுப்போக்கு முதல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் நெய் சாப்பிட்டால் ஏற்படும். ஏனெனில் நெய் அவ்வளவு சீக்கிரம் ஜீரணமாகாது.
Image Source: freepik
தோல் எண்ணெய் பசை கொண்டவர்கள் மற்றும் முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிடக்கூடாது. இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
Image Source: freepik
தொடர்ந்து யோகா செய்பவர்கள் நெய்யை முடிந்தவரை குறைவாக உட்கொள்ள வேண்டும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
Image Source: freepik
உணவில் நெய்யைப் பயன்படுத்துவதை வயிற்று அல்லது செரிமானப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். இது செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.