Virat Kohli: கோலி சதமடிக்கும் வரை திருமணம் செய்யாமல் காத்திருந்த ரசிகர்..! திருமண பரிசாக விராட் தந்தது என்ன தெரியுமா..?
விராட்கோலி சதமடிக்கும் வரை திருமணம் செய்யமாட்டேன் என்ற ரசிகரின் திருமண நாளில் விராட்கோலி 74வது சதத்தை விளாசியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி. கடந்தாண்டு இறுதி முதல் மீண்டும் தனது இயல்பான பார்முக்கு திரும்பிய விராட்கோலி, கடைசியாக ஆடிய 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். விராட்கோலி கடந்தாண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது சதத்தை விளாசுவதற்கு முன்பு வரை மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்.
கோலி சதத்திற்காக காத்திருப்பு:
ஆனாலும், அவர் மீது நம்பிக்கை கொண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவை அளித்துக் கொண்டிருந்தனர். விராட்கோலி தன்னுடைய 71வது சதத்தை விளாசுவதற்கு சுமார் இரண்டரை ஆண்டு காலம் தேவைப்பட்டுவிட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா விளையாடிய போட்டி ஒன்றில், அமன் அகர்வால் என்ற அவரது ரசிகர் விராட் கோலி 71வது சதத்தை விளாசும் வரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மைதானத்தில் பதாகையுடன் நின்று கொண்டிருந்தார்.
71st Loading.... @imVkohli #Cheeku #VK18 #Bhagwan❤️❤️ pic.twitter.com/5FQzEA3uHf
— Aman Agarwal (@Aman2010Aman) April 10, 2022
அப்போது, விராட்கோலி மோசமான பார்மில் இருந்ததால் அமன் அகர்வாலை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், தற்போது விராட்கோலி 74 சதங்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து வைத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அமன் அகர்வால் தான் கூறியபடியே விராட்கோலி 71வது சதத்தை விளாசிய பிறகே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
"I asked for the 71st century but he scored 74th on my special day" ❤️❤️❤️@imVkohli @AnushkaSharma @StayWrogn pic.twitter.com/zHopZmzKdH
— Aman Agarwal (@Aman2010Aman) January 16, 2023
திருமண பரிசு:
அவர் திருமணம் செய்துகொள்வதற்குள் விராட்கோலி அமன் அகர்வாலுக்கு திருமண பரிசாக கூடுதலாகவே 3 சதங்களை விருந்தாக அளித்துவிட்டார். இதை அமன் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தான் பதாகையுடன் நின்ற புகைப்படத்தையும், விராட்கோலி 74வது சதம் விளாசிய தினத்தன்று மணக்கோலத்தில் தான் நிற்பது போன்ற புகைப்படத்தையும் அமன் அகர்வால் பகிர்ந்துள்ளார்.
அமன் அகர்வால் ட்விட்டர் பக்கத்தில், நான் 71வது சதத்தை தான் கேட்டேன். ஆனால், அவர் 74வது சதத்தை என்னுடைய சிறப்பு வாய்ந்த நாளில் பரிசாக வழங்கியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அமன் அகர்வாலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.