மேலும் அறிய

Viral Video: முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்... ஜூனியர் பும்ராவுக்கு அர்ப்பணம் ! வைரல் வீடியோ!

முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பறிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதை தன்னுடைய மகன் அங்கத்துக்கு  அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இச்சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறதுஇதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதுதொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடினார். அதன்படி, 290 பந்துகள் களத்தில் நின்ற அவர் 209 ரன்களை குவித்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253  ரன்கள் சேர்த்ததுஇங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராவ்லி 78 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார்சிறப்பாக விளையாடி வந்த இவர் அக்‌ஷர் பட்டேல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்சாக் கிராவ்லியைத் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் தொடங்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரை அனைவரும் ஓரளவுக்கு தாக்குபிடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸரும் விளாசி 47 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.

 இறுதியில் இங்கிலாந்து அணி 55.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டும் சேர்த்ததுஇதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலையில் உள்ளதுமுதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

மகனுக்கு அர்ப்பணிக்கிறேன்:

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பறிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதை தன்னுடைய மகன் அங்கத்துக்கு  அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அப்போது பேசிய பும்ரா, “இதை என் மகனுக்கு அர்ப்பணிக்கிறேன். இது என் மகனின் முதல் சுற்றுப்பயணம். அவர் என்னுடன் தான் இருக்கிறார். அவரைப்பார்க்க ஆவலாக இருக்கிறேன். 6 விக்கெட்டுகளை எடுத்தது நன்றாக இருந்தது. நாள் முடிவில் அணியின் வெற்றியில் நம்முடைய பங்கு இருந்தால் அந்த உணர்வு சிறப்பானதாக இருக்கும்என்று கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில்  6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் தன்னுடைய 100-வது விக்கெட்டையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND vs ENG 2nd Innings: மூன்றாவது நாள் ஆட்டம்...அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி!

மேலும் படிக்க: Viral Video: சிக்ஸர் பறக்க விட்டு சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்...வைரல் வீடியோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Embed widget