USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?
டி20 உலகக்கோப்பைத் தொடரில் கனடா அணிக்கு எதிராக அமெரிக்க வீரர் ஜோன்ஸ் 22 பந்துகளில் அபார அரைசதம் விளாசினார்.
ஐ.பி.எல். தொடர் முடிவடைந்த நிலையில் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா இன்று மோதின. இதில், கனடா அணி முதலில் பேட் செய்து 194 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கு:
இதையடுத்து, 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஆண்ட்ரீஸ் கோவ்ஸ் – ஆரோன் ஜோன்ஸ் அதிரடியால் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, அமெரிக்காவின் அதிரடி வீரர் ஜோன்ஸ் சிக்ஸர் மழையாக பொழிந்து அமெரிக்காவை அபார வெற்றி பெற வைத்தார்.
அமெரிக்க அணியின் முக்கிய வீரரான ஆரோன் ஜோன்ஸ் உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பெரியளவில் சிறப்பாக ஆடவில்லை. இந்த சூழலில், ஆரோன் ஜோன்ஸ் களமிறங்கியபோது ஓவருக்கு 12 ரன்கள் மேல் அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று அமெரிக்காவிற்கு இருந்தது.
22 பந்துகளில் அரைசதம்:
அதிரடியாக ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால், அமெரிக்காவின் ரன் ஜெட்வேகத்தில் எகிறியதுடன் ஜோன்சும் 22 பந்துகளில் அபார அரைசதம் அடித்தார். அதில் 6 சிக்ஸர் அடங்கும்.
வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் என்பது போல ஆடிய ஜோன்ஸ் 14 பந்துகள் மீதம் வைத்து அமெரிக்காவை வெற்றி பெற வைத்தார். அவர் மொத்தம் 4 பவுண்டரி, 10 சிக்ஸர்களை விளாசினார். அதில் 2 சிக்ஸர்கள் 100 மீட்டருக்கு மேல் அடிக்கப்பட்டது. குறிப்பாக, கனடா பந்துவீச்சாளர் ஜெர்மி கோர்டான் வீசிய பந்தில் ஜோன்ஸ் – கோவ்ஸ் ஜோடி அசத்தியது. ஜெர்மி கோர்டான் வீசிய 14வது ஓவரில் நோ பால், ஒயிட் என அவர் வீசி மொத்தம் 33 ரன்களை விளாசியது அமெரிக்கா. 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு மட்டும் 131 ரன்களை குவித்தனர்.
29 வயதான ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவின் தவிர்க்க முடியாத வீரராக உலா வருகிறார். அவர் 43 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 10 அரைசதங்களுடன் 1454 ரன்களும், 27 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 478 ரன்களும் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: USA vs Canada T20 WC 2024: ஜோன்ஸ் வெறித்தனம்! வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையை தொடங்கிய அமெரிக்கா!
மேலும் படிக்க: Dinesh Karthik Retirement: என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி - ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்