மேலும் அறிய

Dinesh Karthik Retirement: என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி - ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் தன்னுடைய 19வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த ஒரு நாள் போட்டியில் தேசிய அளவில் அறிமுகமானார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக (ஜூன் 1) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் நாயகன்:

இந்திய கிரிக்கெட் அணி வீரர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய அணியில் கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்படி தன்னுடைய னது 19வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த ஒரு நாள் போட்டியில் தேசிய அளவில் அறிமுகமானார்.

அதேபோல் ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து  பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன்படி ஆர்சிபி அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்து அந்த அணி ரசிகர்களை கவர்ந்தார். 

தினேஷ் கார்த்திக் 94 ஒருநாள் போட்டிகளில் 1,792 ரன்கள் மற்றும் ஒன்பது அரைசதம் அடித்துள்ளார். டெஸ்டில், கார்த்திக் 42 இன்னிங்ஸ்களில் வங்கதேசத்திற்கு எதிரான சதம் உட்பட 1,025 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 60 ஆட்டங்களில் 686 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 2006/07 மற்றும் 2020-21 இல் இரண்டு முறை கேப்டனாக சையத் முஷ்டாக் அலி டிராபி, டி20 போட்டியை வென்றார். ஐபிஎல்லில் 257 போட்டிகளில் விளையாடி 26.32 சராசரியில் 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார். 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு:

முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக் இன்று அவருடைய பிறந்த நாளன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாள்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் உண்மையில் நெகிழ்ச்சியடைய வைத்தது.

என்னை இப்படி உணர வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சார்ந்திருக்கும் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் நீண்ட பயணத்தில் உடனிருந்த பயற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வுக்குழுவினர், சக வீரர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி. ” எனத் தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget