Unbeaten World Cup Teams: உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காத அணிகள்... சரித்திரம் படைக்குமா இந்தியா?
உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளின் பட்டியலில் இந்திய அணியும் இடம் பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடர் தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே காணத அணியாக வலம் வரும் இந்திய அணி, இன்று (நவம்பர் 12) நடைபெறும் லீக் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது. இதனிடையே, இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பையின் ஒரு தொடரில் தோல்வியே பெறாமல் சாம்பியன் பட்டத்தை அணிகள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ஆஸ்திரேலிய அணி:
1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி ஆஸ்திரேலியா. அதன்படி, ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக உள்ளது ஆஸ்திரேலிய அணி. இதில் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதேபோல் தான் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணி மொத்தம் விளையாடிய போட்டிகள் 11. அந்த தொடரிலும் 11 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றது.
இலங்கை:
இந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய அணிகளில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை போல் இலங்கை அணியும் ஒன்று. ஆனால் இந்த அணி கடந்த 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற போது, தாங்கள் விளையாடி அந்த தொடரில் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ்:
கடந்த 1975 ஆம் ஆண்டு மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி வெஸ்ட் இண்டீஸ். ஆனால், இந்த முறை நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கான தகுதியை கூட அந்த அணியால் பெற முடியவில்லை. முன்னாதக, கடந்த 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், அந்த அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சரித்திரம் படைக்குமா இந்தியா?
அதோபோல், தான் இந்தியாவில் இந்த முறை நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டிகள் வீதம் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் 6 போட்டிகளில் வெற்றி பெரும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இச்சூழலில் தான், இதுவரை 8 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இன்று (நவம்பர் 12) நெதர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்று, இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றால் அதுமிகப்பெரிய சரித்திர வெற்றியாக பார்க்கப்படும்.
மேலும் படிக்க: IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி..? முழு விவரம் உள்ளே!
மேலும் படிக்க: Babar Azam Captaincy: பதவி விலகுகிறாரா பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்..? கிரிக்கெட் வாரியத்தின் முடிவு? வெளியான தகவல்!