TNPL 2023: ஒரு பந்தில் 18 ரன்கள்.. கடைசி பந்தை போட்டுகொண்டே இருந்த அபிஷேக்.. மோசமான ரெக்கார்ட்
சேலம் அணியில் இருந்து இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீச வந்த அணி கேப்டன் அபிஷேக் தன்வரிடம் இருந்து சிறப்பான பந்துவீச்சை அனைவரும் எதிர்பார்த்தனர். அபிஷேக் தனது ஓவரின் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
கிரிக்கெட் என்பது எவ்வளவு திருப்பங்களை தரும் விளையாட்டு என்பது கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு விசித்திரமானது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் சீசனின் 2வது போட்டியில் வித்தியாசமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கு இடையேயான போட்ட்டியில் ஒரே பந்தில் 18 ரன்கள் கிடைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2வது போட்டியில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் விளையாடியது.
முதலில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் பாபா அபராஜித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் பால் களமிறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட சென்னை அணியின் ஸ்கோர் எகிற தொடங்கியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 91 ரன்கள் எடுத்திருந்தபோது 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த ஜெகதீசனை தனது வித்தியாசமான பந்துவீச்சால் மோஹித் ஹரிஹரன் வெளியேற்றினார். பிரதோஷ் பால் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 88 ரன்கள் சேர்க்க, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு சேலம் அணியில் இருந்து இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீச வந்த அணி கேப்டன் அபிஷேக் தன்வரிடம் இருந்து சிறப்பான பந்துவீச்சை அனைவரும் எதிர்பார்த்தனர். அபிஷேக் தனது ஓவரின் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
The most expensive delivery ever? 1 Ball 18 runs#TNPLonFanCode pic.twitter.com/U95WNslHav
— FanCode (@FanCode) June 13, 2023
கடைசி பந்தை வீச வந்த கேப்டன் அபிஷேக், முதல் பந்து நோ பந்தாக போட, அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க மொத்தம் 7 ரன்கள் வந்தது. இப்போது மீண்டும் அடுத்த பந்தில் 2 ரன்கள் வந்த நிலையில் நோ பால் ஆனது. அதன் பிறகு அபிஷேக் வைட் பந்தை வீசினார். இருப்பினும், அவர் லீகல் பந்தை வீசியபோது, சஞ்சய் யாதவ் அந்த பந்தை சிக்ஸருக்கு அடித்தார். இப்படி ஒரு பந்து வீச அபிஷேக் 5 முறை பந்து வீசினார்.
மோசமான சாதனை:
இன்னிங்ஸின் கடைசி பந்தில் 18 ரன்களை விட்டுக்கொடுத்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வார் தனது பெயரில் மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்தார். ஒரே பந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, உலக கிரிக்கெட்டில் இந்த சாதனை இன்னும் கிளின்ட் மெக்காய் பெயரில் உள்ளது. 2012-13 பிக் பாஷ் லீக் சீசனில் ஒரு போட்டியின் போது 1 பந்தில் 20 ரன்கள் கொடுத்தார்.