AUS vs SCO: ஸ்காட்லாந்தை வீழ்த்தி கெத்து காட்டிய ஆஸ்திரேலியா... சூப்பர் 8ல் நுழைந்த இங்கிலாந்து.. எப்படி தெரியுமா..?
AUS vs SCO: 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
T20 உலகக் கோப்பை 2024 இன் போட்டி எண் 35ல் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து இடையே நடைபெர்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணி பதிவு செய்த மிகப்பெரிய ஸ்கோராக இது பதிவானது.
ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்முல்லன் 34 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஸ்காட்லாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா:
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றிபெற்றது.
181 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. 1 ரன்களை மாத்திரம் பெற்று பெவிலியன் திரும்பினார் டேவிட் வார்னர். பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி 32 ரன்கள் (23 பந்துகள்) சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் ஆறாவது ஓவரின் முதல் பந்தில் 9 பந்துகளில் 1 பவுண்டரி உதவியுடன் 08 ரன்கள் மட்டுமே எடுத்த கேப்டன் மார்ஷின் விக்கெட்டில் காலியானது. இதன்பின், 9வது ஓவரின் இரண்டாவது பந்தில் பந்துகளில் 1 சிக்சருடன் 11 ரன்கள் எடுத்திருந்த கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இங்கிருந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மார்க் ஸ்டோனிஸ் நான்காவது விக்கெட்டுக்கு 80 (44 பந்துகள்) பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தேடி தந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்காக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் மேட்ச் வின்னிங்ஸ் விளையாடினர். ஹெட் 49 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். ஸ்டோனிஸ் 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து தோல்விக்காக காத்திருந்த இங்கிலாந்து அணி, தற்போது ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி சூப்பர் 8க்கு சென்றது எப்படி..?
2024 டி20 உலகக் கோப்பையின் குரூப் பியில் இங்கிலாந்து உள்ளது. இந்தக் குழுவில் இருந்து ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே சூப்பர் 8-ஐ எட்டியுள்ளது. தற்போது இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன், +3.611 என்ற நிகர ரன் ரேட்டை பெற்றது. அதேபோல், ஸ்காட்லாந்தும் 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்ற நிலையில், ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஸ்காட்லாந்தின் நிகர ரன் ரேட் இங்கிலாந்தை விட சிறப்பாக இல்லாததால், சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஸ்காட்லாந்துக்கு ஏற்பட்டது.
2024 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து எப்படி..?
2024 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, நடந்த 2வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நமீபியாவுக்கு எதிராக இன்று விளையாடிய இங்கிலாந்து அணி, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.