T 20 உலகக்கோப்பை.. விராட் கோலி.. ரோஹித் சர்மா விளையாடுவார்களா? அஜித் அகர்கர் ஆலோசனை! வெளியான முக்கிய தகவல்!
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா இல்லையா? என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
டி20 உலகக் கோப்பை:
கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இச்சூழலில், புதிய ஆண்டான இந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பையை எதிர் நோக்கி காத்திருக்கிறது இந்திய அணி.
இதனிடையே இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் சுற்றி வருகிறது. முன்னதாக, 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புவனேஸ்வர் குமார் தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
இச்சூழலில் தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் நாளை (ஜனவரி 3) ஆம் தேதி கேப்டவுன் நகரில் 2 வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியுடன் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதில் அடுத்ததாக நடைபெறும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளதால் கேப்டனாக யார் செயல்படுவது என்பது பற்றி ராகுல் ட்ராவிட்டிடம் அவர்கள் விவாதிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா- கோலி விளையாடுவார்களா:
மேலும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா இல்லையா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. ஐபிஎல் தொடரின்போது அவர்களையும் சேர்த்து 25 – 30 வீரர்களை கண்காணித்து நல்ல ஃபார்மில் இருப்பவர்களை மட்டுமே 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யும் முடிவை பரிசீலிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது கூறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசுகையில், “சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவரும் ஃபிட் இல்லை. ஆப்கானிஸ்தான் தொடர் உங்களுக்கு எதுவும் சொல்லாது. ஐபிஎல்லின் முதல் மாதத்தின் அடிப்படையில் அனைத்தும் முடிவு செய்யப்படும்”என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Pro Kabaddi 2024: பலமான புனேரி பல்தன் அணி! புது யுக்திகளுடன் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ்! வெற்றி கிட்டுமா?
மேலும் படிக்க: David Warner: "காணாமல் போன பச்சை தொப்பி" கடைசி டெஸ்ட்டில் ஆடும் வார்னர் உருக்கமான வேண்டுகோள்!