மேலும் அறிய

David Warner: "காணாமல் போன பச்சை தொப்பி" கடைசி டெஸ்ட்டில் ஆடும் வார்னர் உருக்கமான வேண்டுகோள்!

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணாமல் போயிருக்கிறது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. அதன்படி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கடைசி போட்டி நாளை (ஜனவரி 3) ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தான் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8695 ரன்கள் குவித்துள்ளார்.

அதுமட்டும் இன்றி ஒருநாள் போட்டிகளில் 161 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 6932 ரன்களையும் குவித்திருக்கிறார். இது தவிர்த்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் 99 ஆட்டங்களில் விளையாடி 2894 ரன்களை குவித்துள்ளார்

கடைசி டெஸ்ட் போட்டி:

இந்நிலையில் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணாமல் போயிருக்கிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு வேறு வழியில்லை என்பதால் கடைசி முயற்சியாக இந்த வீடியோவை பதிவிடுகிறேன்.

எனது பச்சை நிற தொப்பி எனது லக்கேஜில் இருந்து காணாமல் போயுள்ளது. சில தினங்களுக்கு முன் மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு எனது லக்கேஜ் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது காணாமல் போயிருக்கலாம்.

View this post on Instagram
 
A post shared by David Warner (@davidwarner31)

கேமராவில் செக் செய்து பார்த்தபோது போதுமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. எனது தொப்பியை யாராவது எடுத்திருந்தால் தயவு செய்து கொடுத்து விடுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. என்னிடம் மற்றொரு பேக் உள்ளது. அதனை உங்களுக்குப் பரிசாக கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய தொப்பியை மட்டும் கொடுத்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: MS Dhoni: "ஒரு முறை கூட முடியல" தோனியிடம் எடுபடாத ஜாம்பவான் நாதன் லயனின் பவுலிங்!

மேலும் படிக்க: Tamil Thalaivas: தமிழக வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்குமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் விருப்பம் இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

US Air Strike in Syria: சிரியாவை போட்டுத் தாக்கிய அமெரிக்கா; 35 ISIS பயங்கரவாத இலக்குகளை அழித்த ‘ஆபரேஷன் ஹாக்கி‘
சிரியாவை போட்டுத் தாக்கிய அமெரிக்கா; 35 ISIS பயங்கரவாத இலக்குகளை அழித்த ‘ஆபரேஷன் ஹாக்கி‘
Parasakthi: திமுக படத்தை அடிக்கும் காங்கிரஸ்..! பராசக்தியை பார்த்து காசை வீணாக்க வேண்டாம் என அட்வைஸ்
Parasakthi: திமுக படத்தை அடிக்கும் காங்கிரஸ்..! பராசக்தியை பார்த்து காசை வீணாக்க வேண்டாம் என அட்வைஸ்
TN Weather Update: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி.. 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி.. 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
Top 10 News Headlines: குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம், ‘டிஜிட்டல் அரெஸ்ட்‘-ரூ.14 கோடி அபேஸ், இந்தியாவில் X அதிரடி - 11 மணி செய்திகள்
குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம், ‘டிஜிட்டல் அரெஸ்ட்‘-ரூ.14 கோடி அபேஸ், இந்தியாவில் X அதிரடி - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Air Strike in Syria: சிரியாவை போட்டுத் தாக்கிய அமெரிக்கா; 35 ISIS பயங்கரவாத இலக்குகளை அழித்த ‘ஆபரேஷன் ஹாக்கி‘
சிரியாவை போட்டுத் தாக்கிய அமெரிக்கா; 35 ISIS பயங்கரவாத இலக்குகளை அழித்த ‘ஆபரேஷன் ஹாக்கி‘
Parasakthi: திமுக படத்தை அடிக்கும் காங்கிரஸ்..! பராசக்தியை பார்த்து காசை வீணாக்க வேண்டாம் என அட்வைஸ்
Parasakthi: திமுக படத்தை அடிக்கும் காங்கிரஸ்..! பராசக்தியை பார்த்து காசை வீணாக்க வேண்டாம் என அட்வைஸ்
TN Weather Update: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி.. 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி.. 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
Top 10 News Headlines: குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம், ‘டிஜிட்டல் அரெஸ்ட்‘-ரூ.14 கோடி அபேஸ், இந்தியாவில் X அதிரடி - 11 மணி செய்திகள்
குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம், ‘டிஜிட்டல் அரெஸ்ட்‘-ரூ.14 கோடி அபேஸ், இந்தியாவில் X அதிரடி - 11 மணி செய்திகள்
TN Roundup: விஜய்க்கு பாதுகாப்பு கோரும் தவெக, திமுக மீது அட்டாக், மீனவர்களுக்கு வார்னிங் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய்க்கு பாதுகாப்பு கோரும் தவெக, திமுக மீது அட்டாக், மீனவர்களுக்கு வார்னிங் - தமிழகத்தில் இதுவரை
Parasakthi Day 1 Collection: சிவகார்த்திகேயன் ஏமாற்றம்.. அமரனில் பாதிகூட இல்லை.. பராசக்தி முதல் நாள் வசூல் அவ்ளோ தானா?
Parasakthi Day 1 Collection: சிவகார்த்திகேயன் ஏமாற்றம்.. அமரனில் பாதிகூட இல்லை.. பராசக்தி முதல் நாள் வசூல் அவ்ளோ தானா?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 12-ம் தேதி எந்தெந்த இடங்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல ஜனவரி 12-ம் தேதி எந்தெந்த இடங்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Hyundai Discount: ஹுண்டாய் ஆஃபர்..! க்ரேட்டா, எக்ஸ்டெர் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி - எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு?
Hyundai Discount: ஹுண்டாய் ஆஃபர்..! க்ரேட்டா, எக்ஸ்டெர் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி - எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு?
Embed widget