மேலும் அறிய

Pro Kabaddi 2024: பலமான புனேரி பல்தன் அணி! புது யுக்திகளுடன் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ்! வெற்றி கிட்டுமா?

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் வலுவான புனேரி பல்தன் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.

விறுவிறுப்பான கபடி லீக்:

10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்தாண்டு டிசம்பர் 2 ஆம்  தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

இதில், கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இதில், அசத்தலாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி தங்களது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. அதன்படி, 31 - 42 என்ற அடிப்படையில் தபாங் அணியை வீழ்த்தியது. அதேபோல், கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி.  

7 தொடர் தோல்வி:

இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. பின்னர், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை  எதிர்கொண்டது. இதில் அதிரடியாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 36- 38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இப்படி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அந்த அணி, பின்னர் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

வலுவான புனேரி பல்தன்:

இந்நிலையில் தான் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் வலுவான புனேரி பல்தன் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. அதன்படி, புனேரி பல்தன் அணி 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளது. மேலும், ஒரே ஒரு போட்டியில் தான் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற தங்களது முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன் விளையாடிய புனேரி பல்தன் அணி 37 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி யு மும்பா அணியிடம் மோதிய அந்த அணி 43 - 32 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதேநேரம், கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற அரியானா ஸ்டீலர்ஸ் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. மேலும்,  பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ்,தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகளை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது புனேரி பல்தன் அணி.

புதிய யுக்தியை செயல்படுத்தும் தமிழ் தலைவாஸ்:

இச்சூழலில் தன் வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் புனேரி பல்தன் அணி தமிழ் தலைவாஸ் அணியுடன் விளையாட உள்ளது.  இதனிடையே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி பலமான புனேரி பல்தன் அணியை வீழ்த்த வேண்டும் அதேபோல் தங்களது வெற்றிப் பயணத்தை தொடங்க வேண்டிய சூழலில் உள்ளது தமிழ் தலைவாஸ். இதனால் பல்வேறு யுக்திகளை அந்த அணி செயல்படுத்தும். இதனால் இந்த போட்டி நிச்சயம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Embed widget