விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. pic.twitter.com/6F4hB98yGx
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 10, 2025
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம் கொடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி பானை சின்னம் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பானை சின்னத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தையும் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

