Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுத் இடைத்தேர்தல் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுத் இடைத்தேர்தல் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் அறிவிப்பு:
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழ்க வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார” என குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த வி.சி. சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி. சந்திரகுமார் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதன் முடிவில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., வாக வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு தொடங்கி 2016ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ-வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில், தேமுதிகவின் கொறடாவாகவும் செயல்பட்டார். 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டாலும் தென்னரசுவிடம் தோல்வியுற்றார். பின்னர் கட்சி செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த அவர், தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 2025 தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளராக திரு.வி.சி.சந்திரகுமார் அவர்களை கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் அறிவிப்பு! pic.twitter.com/1VA1nInwZR
— DMK (@arivalayam) January 11, 2025
விட்டுக் கொடுத்த காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், “ ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

