![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
T20 World Cup 2022: இந்தியாவின் அரையிறுதி கனவு மழையால் தடையா..? ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இதுவரை டி20 போட்டிகளில் ஏழுமுறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இந்தியா 5 முறையும், ஜிம்பாப்வே 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
![T20 World Cup 2022: இந்தியாவின் அரையிறுதி கனவு மழையால் தடையா..? ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..! T20 World Cup 2022: India Vs Zimbabwe head to head, Match Gets Abandoned Due To Rain T20 World Cup 2022: இந்தியாவின் அரையிறுதி கனவு மழையால் தடையா..? ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/d8eeec6109fb3337305e5943a40c12651667703016394571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் 2 சுற்றில் இன்னும் அரையிறுதி சுற்றுக்கு போராடி வருகிறது. அதேபோல் பாகிஸ்தான், வங்காள தேசம், தென்னாப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற போராடுகிறது.
இன்றைய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும். ஆனால், மெல்போர்னில் இன்று நடைபெறவுள்ள போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி போட்டியானது வாஷ் அவுட் செய்யப்பட்டால் இந்தியாவின் நிலைமை என்ன..?
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஜாம்பவான் அணிகளுக்கு மழை மிகப் பெரிய வில்லனாக இருந்து வருகிறது. பல முக்கிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. மழையால் குரூப் 2 சுற்றில் மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், குரூப் 1 இல், சில முக்கியமான போட்டிகள் கைவிடப்பட்டது. இதனால்தான் ஆஸ்திரேலியா போன்ற நடப்பு சாம்பியன் அணிகளும் வெளியேறியது.
இந்தியா தற்போது 4 போட்டிகள் விளையாடி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா (5 புள்ளிகள்) மற்றும் பாகிஸ்தான் (4 புள்ளிகள்) முறையே 2 மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வேக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா அணி 5 ஓவர் கூட விளையாடவில்லை என்றால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். அப்படியானால் இந்தியாவின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும். அரையிறுதிக்கு தகுதிபெறும்.
Only two teams can progress 🤔
— ICC (@ICC) November 5, 2022
Who will qualify for the semi-finals from Group 2?#T20WorldCup pic.twitter.com/VLLj6s8VCi
இதேபோல், இன்றைய மற்ற போட்டிகளில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்காவும், வங்காளதேசத்தை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றாலும் புள்ளி மற்றும் நிகர ரன் ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.
Group 2 triple header with all to play for 👊
— ICC (@ICC) November 5, 2022
Who's making the #T20WorldCup 2022 semi-finals?
State of play ➡️ https://t.co/5UIHFYg1Go#SAvNED | #PAKvBAN | #ZIMvIND pic.twitter.com/z91sfdZPqg
ஹெட் டூ ஹெட் :
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இதுவரை டி20 போட்டிகளில் ஏழுமுறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இந்தியா 5 முறையும், ஜிம்பாப்வே 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி
கணிக்கப்பட்ட ஜிம்பாப்வே அணி:
வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்கராவா, டெண்டாய் லெஸ் சதாரா, முசரபானி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)