Watch Video: தெறிக்கும் ஸ்டெம்புகள்.. பவுலிங்கில் மாஸ் காட்டிய தோனி..! வைரல் வீடியோ!
உலககோப்பை டி20 தொடரின் இந்திய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ஆலோசகரும், முன்னாள் கேப்டனுமான தோனி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டித்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 2 பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 6 புள்ளிகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடமே பிடித்ததால், தொடரில் இருந்து வெளியேறியது. இந்திய அணி நேற்று தனது கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் நமீபியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த நிலையில், ஐ.சி.சி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடப்பு உலககோப்பைத் தொடருக்காக இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தோனி வலைப்பயிற்சியி்போது பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுகிறார். மிதவேகப்பந்து வீச்சாளரான தோனி இரு பந்துகதளை பந்துவீசுவது இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தோனி தனது முதல்பந்தை சற்று வேகமாக வீசுகிறார். இரண்டாவது பந்தை துல்லியமாக வீசீ ஸ்டம்பை தகர்க்கிறார்.“
View this post on Instagram
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தொடக்க வீரர், 3வது வீரர், நான்காவது, ஐந்தாவது, ஆறாவது சில சமயங்களில் 7வது வீரராக கூட இந்திய அணிக்காக பேட் செய்துள்ளார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனான தோனி அதிரடியான பேட்ஸ்மேன் ஆவார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தோனி மிகவும் அரிதாகவே போட்டிகளில் பந்துவீசுவார்.
90 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தோனி டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை பந்துவீசியுள்ளார். அதேபோல, 350 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். தனது சிறந்த பந்துவீச்சாக 14 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றியதை தோனி பதிவு செய்துள்ளார். டி20 மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் தோனி இதுவரை பந்துவீசியது இல்லை.
அதேசமயத்தில், மகேந்திர சிங் தோனி பேட்ஸ்மேனாக இந்திய அணிக்காக அளப்பரிய பங்காற்றியுள்ளார்.அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 876 ரன்களை ( 6 சதங்கள், 1 இரட்டை சதம், 33 அரைசதங்கள் உள்பட) குவித்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 773 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 10 சதங்களும், 73 அரைசதங்களும் அடங்கும். 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 2 அரைசதங்கள் அடங்கும். ஐ.பி.எல். போட்டிகளில் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தியுள்ளார். 220 ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரத்து 746 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 23 அரைசதங்கள் அடங்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்