மேலும் அறிய
Tamilnadu Roundup: பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
-
மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம். இவ்விவகாரம் குறித்து எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்க தான் தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை, காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு. பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஜூலையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்.
- தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், பேருந்துகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ‘Bus First‘ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
- மாவட்ட வாரியாக, உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை முதல் காஞ்சிபுரத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாகவும் தகவல.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
- சென்னை அபிராமபுரத்தில் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி விஜயகுமார், கௌதம், நிரஞ்சன் ஆகியோர் கைது. ரவுடி விஜயகுமார் தப்ப முயன்றபோது தற்காப்புக்காக காலில் சுடப்பட்டதால் அவர் படுகாயம்.
- காட்டுமன்னார்கோவில் பகுதியில சாலையில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகளுக்கு கழுத்தில் ஒளிரும் ஸ்டிக்கரை மாட்டும் போலீசார். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை.
- உதகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக உதவியாளர் கைது.
- தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















