மேலும் அறிய

IND vs SCO: ஒளிரும் நம்பிக்கை.. 6.3 ஓவரிலேயே வெற்றி இலக்கை தட்டித்தூக்கிய இந்தியா..!

86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய  இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்து ராகுல் - ரோஹித் இணை.

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில், இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்நிலையில், துபாய் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

இந்த உலகக்கோப்பை தொடரில், முதல் இரண்டு போட்டிகளை இழந்திருந்த இந்திய அணி, கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று, இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் இனி வரும் போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணிக்கு, இன்றைய வெற்றி, அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்து கொள்வதற்கான நம்பிக்கையை தருகிறது. 7.1 ஓவர்களுக்குள் போட்டியை முடித்தால், 2 புள்ளிகள் கிடைப்பதோடு ரன் ரேட்டிலும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். 

இதனால், 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய  இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது ராகுல் - ரோஹித் இணை. வெறும் 4 ஓவர்களில் 2 சிக்சர்கள்,8 பவுண்டரிகள் என தெறிக்கவிட்டது இந்த இணை. 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வீல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார் ரோஹித். அவரைத் தொடர்ந்து அரை சதம் கடந்த ராகுல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், வின்னிங் ஷாட் அடிக்க கோலி - சூர்யகுமார் யாதவ் இணை களத்தில் நின்றது. 

இதனால், நடப்பு உலகக்கோப்பையின் அதிவேக 50 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது இந்தியா. மேலும், 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது இந்திய அணி. இதன் மூலம் 2 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, ரன் ரேட்டிலும் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகளை முந்தியுள்ளது. இனி நடக்க இருக்கும் கடைசி போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாலும், ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினாலும் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகும். கடைசி நேர பரபரப்பும், நம்பிக்கையும் ஒன்று சேர இந்திய அணி ரசிகர்கள் இனி வரும் போட்டிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினர் இந்திய பவுலர்கள். இந்திய பவுலர்களைப் பொருத்தவரை முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால், 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் எடுத்தது.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Embed widget