மேலும் அறிய

Sunil Narine: ரசிகர்களுக்கு நன்றி.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சுனில் நரேன்..

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுனில் நரேன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (நவம்பர் 5) அறிவித்துள்ளார்.

சுனில் நரேன்:

கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்த சுனில் நரேன் இதுவரை மொத்தம் 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமானார்.

அதன்படி, மொத்தம் 65 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள நரேன், 92 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.  363 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மொத்தம் 36 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். அதேபோல் தனது கடைசி ஒரு நாள் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அக்டோபர் 5 ஆம் தேதி 2016-ஆம் ஆண்டு விளையாடினார்.

டெஸ்ட் அறிமுகம்:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunil Narine (@sunilnarine24)

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகள்:

சுனில் நரேன்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மொத்தம் 51 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில், 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் கொல்க்கத்தா அணிக்காக  விளையாடினார். 161 போட்டிகளில் விளையாடி 163 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இச்சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் இன்று (நவம்பர் 5) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ’ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது ரசிகர்கள், நண்பர்கள்,அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் நன்றி.’ என்று கூறியுள்ளார். மேலும், ’நான் சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த சூழலில் எனது ஓய்வை அறிவிக்கிறேன். நான் பிறந்த நாடான டிரினிடாட் & டொபாகோவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்,  சுனில் நரேனின் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் செலவு செய்ய வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: Happy Birthday Virat Kohli: ரன் மிஷின் விராட் கோலி...பிறந்த நாட்களில் எப்படி விளையாடி உள்ளார்? விவரம் இதோ!

மேலும் படிக்க: IND vs SA: டேபிள் டாப்பர்களில் யார் இன்று டாப்? ஈடன் கார்டனில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா! புள்ளி விவரம் என்ன? 

 

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget